திங்கள், 9 நவம்பர், 2015

மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் - பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.

முன்னுரை:- நல்லாட்சி நடத்திய மவுரியப் பேரரசர் அசோகரின் அருமை பெருமைகளை உலகுக்குப் பறை சாற்றும் வண்ணம் இந்தியத் தேசியக் கொடியில் அசோகச் சக்கரம் பொறிக் கப்பட்டது. அசோகர் புத்த மதத்தையும், பாலி மொழியையும் பெரிதும் ஆதரித்தார். இவரது ஆட்சிக்காலம் (கிமு 268-_232) இந்தியர்களின் பொற் காலம் மவுரியர்களின் ஆட்சிக்காலம் (கிமு 322_-185) புஷ்ய மித்ர சுங்கன் என்ற தளபதி ஆட்சியைக் கைப்பற்றிய போது முடிவுக்கு வந்தது. இந்த புஷ்யமித்திரன் ஆரியரின் வைதிக மதத்தை ஆதரித்தார். அசுவமேத யாகங்கள் செய்தார். இருந்தபோதிலும் புத்த மத வரலாற்றுச் சின்னங்களை அழிக்காமல் பராமரித் தார் (ரோமிலா தாப்பர்) இந்த சுங்க வம்சத்தைத் (கிமு 185- _ கிபி 75) தொடர்ந்து நாயக்கர்கள் காலம் வரை (சுமார் 2000 ஆண்டுகள்) தோன்றிய பல மன்னர்கள் பெரும்பாலும் வைதிக மதத்தை ஆதரித்தனர். இத்தகைய வைதிக மத ஆட்சிகளுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தது மனுதர்ம சாஸ்திரமாகும். இந்த மனுதர்ம சாஸ்திரம் உண்மையிலேயே நீதி நூலா அல்லது மனித நேயத்திற்கு எதிரானதா என்பதைபற்றி இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது
சூத்திரர்களின் ஆட்சிபற்றி மனு தர்மம்:-
1. வடஇந்தியாவில் சூத்திரர்கள் ஆட்சிகள் ஏற்பட்டன. அவைகளில் முக்கியமானவை நந்தர்களின் ஆட்சியும், மவுரியர்களின் ஆட்சியும் ஆகும். இந்த சூத்திரர்களின் ஆட் சிகளே மனு சாஸ்திரம் உருவாகு வதற்கு காரணமாக அமைந்தன. மீண்டும் சூத்திரர்களின் ஆட்சி இந்தியாவில் ஏற்படாத வகையில் சூத்திரர்களை அடக்கும் வகையில் பல கடுமையான சமூகக் கட்டுப் பாடுகள் மனு சாஸ்திரத்தில் சேர்க் கப்பட்டன என வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.
2. சூத்திர அரசர்கள் ஆளும் நாட்டில் பிராமணர்கள் குடியிருக்கக் கூடாது விதி (61-4) (ஆதாரம்:-- Translation of Manu Dharma by Patrick  Olivelli and Oxford university Press)
மேலும் இந்த நூலில் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படுகின்றன.
1. ஈ.வெ.ராமசாமி என்பவர் மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்தினார்
2. டாக்டர் அம்பேத்கர் 1935இல் ஒரு மாநாட்டில் மனுதர்மத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றினார். இதன்படி மனுதர்மம் நாசிக்-இல் கொளுத்தப் பட்டது.
3. பின்னர் 25.03.2000 இராஜஸ் தானில் உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுதர்மம் எரிக்கப்பட்டது
இத்தகைய மனுதர்ம சாஸ்திரத்தை முதன் முதலாக ஆங்கிலத்தில் 1784இல் மொழி பெயர்த்தவர் வில்லியம் ஜோன்ஸ் ஆவார். இவர் கல்கத்தாவில் நீதிபதியாக இருந்தவர். மேலும் காசியில் ஒரு பிராமணரிடம் ஜோன்ஸ் மனு சாஸ்திரம் கற்றார்.
குறிப்பு: விதி (61-_4 பாகம் 4) _ விதி (61-_4).
பெண்கள் பற்றி மனுதர்மம்
சமீபத்தில் சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல 41 வயதுடைய ஒரு பெண் அனுமதி மறுக்கப்பட்டாள். காரணம் அவள் தன் மகனிடமிருந்து அனுமதிக் கடிதம் பெறவில்லை என்பதே ஆகும். இந்த நிகழ்வினை இந்துக்கள் பலர் வலைத்தளத்தில் கண்டித்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் பெண்கள் பற்றி மனுதர்மம் கூறுவதை கீழே உள்ளவாறு ஒப்பு நோக்கலாம்.
1. பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக் குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும. விதி (148-_5)
2. கன்னித்தன்மை இழந்த பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவள் (விதி 226-_8). இதனால்தான் மத்தியப் பிரதேசத்தில் அரசு நடத்திய இலவச திருமணங்களில் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளானார்கள். மத்திய அரசில் இந்துத்துவா ஆட்சி ஏற்பட்டால் கன்னித்தன்மை சோத னைகள் நடைமுறைக்கு வர வாய்ப் புள்ளது.
3. திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணைக் காட்டி பெண்ணின் தந்தை அடுத்த பெண்ணை மண முடித்து வைத்தால் இரு பெண்களுமே ஒருவனுக்கு மனைவியாக வேண்டும். விதி (204-_8). இந்த விதி பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துகின்றது
4. மாதவிலக்கின் போது ஒரு பெண் உணவு பரிமாறக் கூடாது. விதி 208_-4
5. ஒரு கணவன் தனது மனைவி மலடியாக இருந்தாலோ அல்லது ஆண்வாரிசை பெற்றுத் தரவில்லை என்றாலோ அந்த மனைவியை குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கலாம். விதி (81-_9). இந்தப் பழக்கம் இந்தியாவில் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. இந்த விதியில் தசரதன் மற்றும் பாண்டவர்களின தந்தை என்று சொல்லப்பட்ட  பாண்டு போன்ற ஆண் மலடர்கள் பற்றி எதுவும் கூற வில்லை. ஆண்வாரிசு வேண்டுமென் றால் தசரதன் போல் யாகம் செய்து கொள்ளலாம்
6. ஒரு அரசன் முக்கிய ஆலோ சனையின் போது பெண்களையும், மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்கக் கூடாது.
7. ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டுள்ளாள் விதி (213-_2)
8. கீழ்க்கண்ட பெண்களைத் திரு மணம் செய்துக் கொள்ளக்கூடாது--.- நதி, நட்சத்திரங்கள், மரங்கள், மலைகள், நாகம், பறவைகள் ஆகியவற்றின் பெயர் கொண்டப் பெண்கள் விதி(9-3).
9. ஒரு பெண் தன்னுடைய வீட்டில் ஒரு ஆணின் அனுமதியின்றி எந்த வேலையும்செய்யக் கூடாது. (147-_5).
10. பெண், தன் கணவன் --வக்கிர குணம் பெருநோய், மோசமான நடத்தை ஆகியவற்றைக் கொண்டி ருந்தாலும் அவனை வணங்க வேண்டும் விதி (154-_5).
11. ஒரு பெண்ணுக்கு எந்தவித மதச் சடங்கும் செய்ய தெய்வத்தின் அனுமதி இல்லை விதி (158_--5)
12. ஒரு பெண் தன் கணவன் இறந்த பின் இன்னொரு ஆணின் பெயரை சொல்லக்கூடாது விதி (157-_5).
13. கணவனைப் பணியாதப் பெண், குஷ்ட ரோகியாக மாறுவாள். இறப் பிற்குப்பின் நரியாக மாறுவாள் (164-_5).
14. ஒரு விதவை வெள்ளை உடை அணிந்து கொண்டு, தன் கணவனின் தம்பி (தேவர்)யுடன் மட்டும் உடல் உறவு கொண்டு கருத்தரிக்க அனுமதிக் கப்படுகிறாள். விதி (70_-9).
15. ஒரு பெண் பலவீனமான உடல் அமைப்பு கொண்டிருப்பதாலும் மற்றும் வேதங்களைப் படிக்காததி-னாலும் பெண்கள் சுத்தமற்றவளாகக் (impure)  கருதப்படுவதாலும் தவறுகளைச் செய்யக் கூடியவளாக (falsehood) இருப்பதாலும்,தன் குழந்தைகளின் பெயர் சூட்டுதல், மொட்டை அடித்தல் போன்ற சடங்குகளில் ஈடுபடத் தகுதியற்றவள் விதி (18-_9)
16. ஒரு பெண் தற்பெருமை கொண்டு, தன் கணவனுக்கு அடங்காத பெண்ணின்மீது அரசன் நாயை ஏவ வேண்டும், பொது இடத்தில் விதி (371-_8)
17. ஒரு பெண் தன் கன்னித் தன்மையை இழக்க நேர்ந்தால் அவள் தலை மொட்டை அடிக்கப்பட்டு, இரு விரல்கள் வெட்டப்பட்டு, கழுதை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவாள். விதி (370_-8).
18. ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளவோ, அல்லது வேறுவகையில் உடல் உறவு கொள்ளவோ புனித நூல்களில் சொல்லப்படவில்லை. விதி (65-_9).
19. ஒரு பெண் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுத்தால் தந்தை வீட்டிலிருந்து ஆடை அணிகலன்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. விதி (92_-9).
பெண்களை இழிவுபடுத்துவதாலும், ஆண் வாரிசு பெற்றுத் தராத மனை விக்குக் கொடுமை இழைப்பதாலும், மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் மனுசாஸ்திரத்தை அரசுகள் தடை செய்ய வேண்டும், மனுதர்மம் ஆண் வாரிசைப் பெற்று தராத பெண்ணை கணவன் விலக்கி வைக்கலாம் என்று சொல்வதால் மனுதர்மத்தை நீதி நூலாகக் கருதக்கூடாது.
மேலும் மனுதர்ம சாஸ்திரத்தால் 2000 ஆண்டுகள் அடிமையாக்கப்பட்ட பெண்களுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிகலைஞர்தமிழர் தலைவர் வீரமணி ஆகியோரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தினால் உருவான புதிய சமூக சீர்திருத்தச் சட்டங்களினால் விடுதலை கிடைத்துள்ளது.

மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் (2)

- பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.

சூத்திரர்கள் பற்றி மனுதர்மம்
1.சூத்திரர்களை (தஸ்யூக்களை) திரு டர்கள் என மனு தர்மம் குறிப்பிடுகின் றது.  திருட்டுகளில் இருந்து குடி மக்களைக் காப்பாற்றாத அரசன் பிணத்திற்கு சமம் எனக் கூறுகின்றது. விதி (143_-7)

2.
பிராமணர்கள் பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள். எனவே இந்த உலகம் முழுவதும் பிராமண-ர்களுக்கே சொந்தம். இந்த விதி இந்துத் துவ ஆட்சி இந்தியாவில் அமையும் போது நிறைவேற்றப் பட வாய்ப்பு ஏற்படும். சூத்திரர்கள் பிரம்மாவின் காலில் பிறந்ததினால் பிராமணருக்கும் சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும்.
3. சூத்திரர்கள் மேல் சாதிக்காரர் களுடன் சமமாக அமரக்கூடாது. அமர்ந்தால் அவர்களின் பின்பாகம் வெட்டி எறியப்படும். சூத்திரர்கள் மேல் சாதிக்காரர்களை திட்டினால் சூத்தி ரனின் நாக்கை வெட்டி எறிய வேண் டும். அதே சமயத்தில் சூத்திரர்களை மேல் சாதிக்காரர் திட்டினால் மேல் சாதியினருக்கு எந்த வித தண்டனையும் கூறப்படவில்லை. விதி 281_-8
4.
அரசன் சூத்திரனுக்கு அபராதம் விதித்த பணத்தைக் கட்டத் தவறி னால் சூத்திரன்தன் உடல் உழைப்பால் சரி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சாட்டையடி தர வேண்டும் ஆனால் இந்த விதி பிரா மணனுக்குப் பொருந்தாது. குழந்தை களுக்கு சாட்டையடி ஆனால் பிரா மணனுக்குத் தண்டனை இல்லை
5.பிராமணன், சத்திரிய, வைசிய மற்றும் சூத்திர வருணத்தைச் சேர்ந்தப் பெண்களை மணக்கலாம். ஆனால் ஒரு சூத்திரன் ஒரு சூத்திரப் பெண்ணைத் தான் மணக்க வேண்டும் என்று விதி (12-_3).
6 ஒருவன் சிறப்பாக வாழ வேண்டு மென்றால்--சத்திரியன், படித்த பிரா மணன், பாம்பு-----ஆகியவற்றைப் பகைத்துக் கொள்ளக் கூடாது ( விதி 135_-4)
7. சூத்திரனுடன் பிராமணன் பயணம் செய்யக் கூடாது. விதி (140-_4).
மேலும் கடவுளின் பெயராலும், வேதங்களின் பெயராலும் மக்கள் தொகையில் சுமார் 97 சதவீதத் தினரான சூத்திரர்களை, வரணா சிரம தர்மம் என்ற பெயரால் அடிமை களாகவும் தாசிமகன் என்று பல ஆயிரம் ஆண்டுகள்இழிவுபடுத்திய கொடுமை மனித வரலாற்றில் காணப் படாத ஒன்றாகும். இந்த நிலை சுதந் திரம் என்ற பெயராலும், மக்களாட்சி என்ற பெயராலும் சட்டத்தின் ஆட்சி என்ற பெயராலும்  களையப்படாமல் நீடிப்பது மாபெரும் கொடுமையாகும்
ரைனோசரஸ் மாமிசமும், மனுசாஸ்திரமும்:-
1. சிரத்தா சடங்கில் பிராமணன், தான் சாப்பிட்டு பின் எஞ்சிய உணவை சூத்திரனுக்கு தந்தால் பிராமணன் நரகத்திற்குப் போவான். விதி (249-_3).
2.யாகத்தில் பலியிடும் பொருள் களாக கீழ்க்கண்டவைகள் மனுசாஸ் திரத்தில் சொல்லப் பட்டிருக்கின்றன ரைனோசரஸ் மாமிசம், ஆமை, ஆடு, கரடி, மான். ஆகியவற்றின மாமிசம் மீன், எள் தானியம், பால், பழம் மற்றும் ரிவீபீ திறீமீலீ (266 முதல் 272_-3).
3. பிராமணர் வேதம் ஓதாமல் ஒரு போதும் மாமிசம் சாப்பிடக் கூடாது விதி (36-_5)
4.வேதம் அறிந்த பிராமணன் சடங்கில் பலியிடுவதற்கு மிருகங்களைக் கொன்றால் அந்த பிராமணனும், மிருகமும், கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டு உயர் பதவி அல்லது பிறவி அடைகிறார்கள். விதி (40_-5)
5. நாயால் மற்றும் சூத்திரனால் கொல்லப்பட்ட மிருகங்களின் மாமி சத்திற்கு தீட்டு கிடையாது விதி 131_-5.
பிராமணர் பற்றி மனு தர்மம்
1. பிராமணன் குருவிடம் 36 அல்லது 18 ஆண்டுகள் மூன்று வேதங்களை கற்க வேண்டும். விதி 1-3
2. ரிக் வேதம் கடவுள்களுக்குப் புனிதமானது. யஜூர் வேதம் மனிதர் களுக்குப் புனிதமானது (தேவையானது) சாமவேதம் மனுச வடிவ தேவதை களுக்கு ஏற்றது. விதி (124_-4)
3.இடிவெள்ளம்.புயல் மழை கடல்சீற்றம் ஆகியவற்றின்போது வேதம் ஓதக்கூடாது (விதி 103_-4)
4.சூத்திரன் அருகில் இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது விதி (99-_4)
5.பிராமணன் தினமும் வேதம் ஓதவேண்டும் மற்றும் கடவுள்களுக்கு உணவு படைக்கவேண்டும்.மேலும்  அய்ந்து முறை  தானம் செய்ய வேண்டும் விதிகள் 73 மற்றும் 75_-3
6.இரவில் படுக்கும் கட்டிலின் கால் பகுதியில் திருமகளையும் தலைப் பகுதியில் பத்ரகாளியையும் வணங்க வேண்டும் விதி -89-_3
7.மனைவியுடன் கணவன் இரட் டைப்படை நாட்களில் உடல் உறவு கொண்டால் ஆண்குழந்தைப் பிறக்கும். விதி 48_-3
8. பிராமணன் கீழ்க்கண்டவர்கள் தரும் உணவை சாப்பிடக் கூடாது---பொற் கொல்லர் தச்சர் தையல்காரர் நடிகர் வைத்தியர் பாடகர் ஆண் உறவினரகள் யாரும் இல்லாத பெண் ஆகியோர்  விதி 215-_4
9. பிராமணன் வீட்டில் வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேலைக்காரர் களுடன் சாப்பிடலாம். (விதி 112-_3).
10. தானே தோன்றிய கடவுள் மிருகங்களைப் படைத்ததின் நோக்கமே யாகங்களில் பலி கொடுப்பதற்குத் தான் விதி (39-_5)
11. கீழ்க் கண்டவை பாவச் செயல் கள் அல்ல மனித இயல்புகள். ஆனால் பெரும் பரிசுகள் கிடைக்காது---மாமிசம் சாப்பிடுதல்மது அருந்துதல்காம இச்சை கொள்ளுதல் ஆகியவை-- விதி (56-_5).
12.கடவுளுக்குப் படைக்கப் பட்ட உணவை வேதம் தெரியாதவன் சாப்பிட்டால் அவன் இறந்த பின், பழுக்கக் காய்ச்சிய இரும்பாலான ஈட்டி கோளங்கள் முதலியவற்றை நரகத்தில் விழுங்க வேன்டும். விதி 133_-3)
13. ஒரு பிராமணன் சூத்திரப் பெண்ணை மணந்தால் அவன் இழிவு செய்யப்பட்டு சூத்திரனாக கருதப் படுவான் விதி (17-_3)
14. சகோதரன் மற்றும் தந்தை இல்லாத பெண்ணை பிராமணன் மணம் செய்து கொள்ளக் கூடாது (11-3)
15. சூத்திரப் பெண்ணை பிராமணன் மணந்தால் அவன் நரகத்திற்குப் போவான் விதி (17-3)
16.
திருமணங்கள் எட்டுவகைப்படும். அவை பிரம்மிஅரசா தெய்வாபிரகப் பத்யாஅசுர கந்தரவா ராட்சசா பைசாச என்பன ஆகும். இவற்றில் முதல் நான்குவகை பிராமணர்கள் கடைப் பிடிக்க வேண்டும் (24_-3).
16ஏ. உறவினரைக் கொன்று கண்ணீர விடும் ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று ஒருவன் திருமணம் செய்து கொள்வது இராட்சச முறை திருமணம் ஆகும். விதி (33_-3). இந்த முறை சத்திரியர்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
17 பலி சடங்கின் போது பிராமணன் வேதங்கள புராணங்கள் தரும சாஸ் திரங்கள்ஆகியவற்றை கேட்க வேண் டும். விதி (232-_3) இந்த விதியின்படி புராணங்கள் தோன்றிய பின்னரே மனு சாஸ்திரம் தோன்றி இருக்க வேண்டும்.
18. பிராமணன் காளை அல்லது பசு மீது ஏறி பயணம் செய்யக் கூடாது. விதி (72-4). திருவிழாக்களில் பிராமணர்கள் பல்லக்கிலோ அல்லது தேரிலோ பயணம் செய்யலாமா?
19. பிராமணன் சத்திரியன் அல்லாத அரசனிடம் தானம் பெறக் கூடாது. (விதி 84-_4). பிராமணன் தர்ம சாஸ்தி ரங்களைப் பின்பற்றாத அரசனிடம் தானம் பெற்றால் 21 நரகங்களுக்கும் (தமிஸ்ரா தபனா ரிகிஷாஎரியும்ஆறு காலசூத்ராலோகக்காரகா---) வரிசையாக செல்லுவாரகள். விதி (89_-4)
20. பிராமணனை தனக்குப் பதிலாக வழக்குகளை விசாரிக்க அரசனால் நியமிக்கலாம்.விதி (9_-8)
21. பிராமணர்கள் எண்ணிக்கையில் குறைந்தும் சூத்திரர்கள் அதிகமாகவும் உள்ள நாடு பஞ்சத்தாலும் நோய்களி னாலும் அழியும் விதி 22-_8.
22. அரசன் சாதிக்கேற்ற நீதி வழங்க வேண்டும் விதி 41_-8
23. வழக்கின்போது சூத்திரன் தலையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டும்.
ஆனால் பிராமணன் அவ் வாறு செய்ய வேண்டியதில்லை. விதி 113_-8

மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் (3)


                                                     - பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.

24. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சூத்தி ரனின் உடலில் 10 இடங்களில் தண் டனை (காயம்) வழங்க வேண்டும். ஆனால் பிராமணனின் உடலுக்குத் தண்டனை கிடையாது. நாடு கடத்தலாம் விதி 124-_8
25. அபராதம் பணமாகவோ அல்லது தானியங்கள் எடையாகவோ (பலம் கணக்கில்) வசூலிக்கலாம். பணம் மற்றும் பலம் தமிழ் நாட்டில் புழக் கத்தில் இருந்த சொற்கள்  விதி 135, 138-_8
26. பிராமணனின் பெயரையும் சாதிப்பெயரையும் ஒரு சூத்திரன் சொன்னால் அவன் வாயில் பழுக்க காயச்சிய இரும்பு கம்பியை நுழைக்க வேண்டும் விதி (271-_8)
27. ஒரு பிராமணனுக்கு அவனது கடமைகளைப் பற்றி ஒரு சூத்திரன் அறிவுரை கூறினால் சூத்திரன் வாயிலும் காதிலும் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றவேண்டும் விதி 272-_8
28. பிராமணன் தன் பயணத்தின் போது அடுத்தவன் தோட்டத்தில் புகுந்து கரும்பு மற்றும் கிழங்குகளைப் பறித்தால் பிராமணனுக்கு தண்டனை கிடையாது. விதி 341-_8
29. பிராமணன் தன் சாதியினரைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்தலாம் விதி 348-_8.
30. மேல் சாதிப் பெண்ணை ஒரு தாழ்ந்த சாதி ஆண் காதலித்தால் அவ னுக்கு மரண தண்டனை வழங்கலாம் விதி 366-_8
31. மக்களிடம் வரி வசூலிக்கும் அரசன் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் அரசன் நரகத்திற்குப்போவான் விதி 307-_8
32. கடுமையான குற்றங்களுக்கு ப்ராமணனுக்கு மொட்டை அடித்தால் போதுமானது.ஆனால் பிராமணன் அல்லாதவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.விதி 379-_8.
33. ஒரு பிராமணனைக் கொல்லுவது  உலகத்திலேயே மிகக் கொடிய குற்றம். ஆதலால் ஒரு அரசன் பிராமணனைக் கொல்ல மனதாலும் நினைக்கக் கூடாது.விதி 381-_8
34. பிராமணனை அரசன் ஒரு போதும் கொல்லக் கூடாது. பிராமணனின் உடலுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காமல் அவன் சொத்துக் களைப் பறித்துக் கொண்டு நாடு கடத்தவேண்டும் விதி 380-_8.
35. சூத்திரன் உயர்ந்த சாதிப் பெண்ணைக் கற்பழித்தால அவனை எரித்துக் கொல்ல வேண்டும். ஆனால் பிராமணன் மற்ற சாதிப் பெண்ணைக் கற்பழித்தால் 1000 பணம் அபராதம் கட்டினால் போதும். விதி 377-, 385_8
36. ஒரு சூத்திரன் உயர்ந்த வர்ணத் திற்கு அடிமை சேவகம் செய்வற்கே கடவுளினால் படைக்கப்பட்டவன். சூத்திரனின் எஜமான் அவனுக்கு விடுதலை தந்தாலும் அதனை கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார். விதி 410, 413, 414_-8
37. சூத்திரனுக்கு சொத்துரிமை கிடையாது.எனவே சூத்திரனின் (அடிமையின்) சொத்துக்களை, பிராமணன் பறித்துக் கொள்ளலாம். விதி 417-_8.
38. ஒர் அரசன் பிராமணன் சத்தி ரியன் வைசியன் சூத்திரன் ஆகியோ ருக்கு வர்ணாசிரமத்தின்படி தங்கள் கடமைகளைச் செய்ய உத்தரவு இடலாம் விதி 418_-8.
பிரம்மனின் முகத்திலிருந்து பிறந்த தினால் பிராமணர்களுக்கு இந்த உலகமே சொந்தம் என்று மனு சாஸ் திரம் சொன்னாலும் அது நடக்க வில்லை. மேலும் வேதங்கள் கற்ற போதும் நிறைவேறவில்லை. உதாரணம் இராமயணத்தில் சீதையைக் கண்டு பிடிக்க வேதம் பயின்ற இராமன் அனுமன் உதவியை நாடியது ஆகும். ஆனால் பிராமணர்கள் ஆங்கிலக் கல்வியை கற்ற போது உலகெங்கும் சென்று பணி புரிய முடிந்தது.
இடுப்பில் பூணூல் அணிவதுபற்றி மனுதர்மம்:
மனுதர்மத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்கள் பூணூலை எங்கு அணிய வேண்டும் என்று குறிப் பிடவில்லை. ஆனால் ப்யூக்ளர் என்பவர் தனது மொழிப்  பெயர்ப்பில் நிவீக்ஷீபீறீமீ (இடுப்பு கயிறு) என்று குறிப்பிடுகிறார் விதி (43-2) இவ்வாறு மனுதர்ம காலத்தில் கடவுள்களும் பிராமணர்களும் பூணூலை தோளில் தான் அணிந்திருந்தார்கள் என தெரிவிக்கவில்லை பின்னாளில் கடவுள்களும், பிராமணர்களும் எவ் வாறு தங்கள் தோளில் கிராஸ் பெல்ட்டாக அணிய ஆரம்பித்தார்கள் என்பது கேள்விக்கு உரியது: ஆய்வுக்கு உரியது.
பூணூல் அணிவதற்கு முன் பிரா மணச் சிறுவன், தான் தாழ்ந்த மற்றும் பிற்படுத்தப் பட்டவரின் வீட்டில் உணவு அருந்தியதிற்கும் தாய்பால் குடித்தற்கும் கடவுளிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.. ஆனால் கடவுள் பூணூல் அணிவதற்கு முன் யாரிடம் மன்னிப்புக் கேட்டார் என்பது கேள்விக்கு உரியது.
பிராமணர்களின் தோற்றத்திலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள்
1.. தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் பிராமண குழந்தைக்கு ஜடகர்மன் சடங்கு நடக்கும் ( விதி 29_-2)
2. நல்ல நாளில் நல்ல முகூர்த்த நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் நாமதேயம் நடக்கும் (விதி 28-_2) 3. நல்ல  நேரம் பார்த்து நிகழ்ச்சி களை நடத்தும் வழக்கம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக் கிறது. இந்த வழக்கத்தை தந்தைப் பெரியார் மாற்றினார்.
4. மூன்று வயதில் மொட்டை யடித்தல் 4_16 வயதிற்குள் உபநயனம் முடித்தபின் ப்ராமண சிறுவன் செய்ய வேண்டியவை--பூணூல் அணிதல், வில்வ மரக்குச்சியைக் கையில் பிடித்தல் ஆட்டுத் தோல் மான் தோல் எருமை போன்றவைகளின் தோல் ஆகியவற்றை மேலாடையாக அணிதல் கீழாடையாக சணல் கோணிகம்பளிஅல்லது லங் கோடு அணிதல்.
5. முதல்நாள் இரவில் செய்த பாவங் களுக்காக சூரியன் உதிக்கும் போதும் அன்றைய பகலில் செய்த பாவங் களுக்காக சூரியன் மறையும் போதும் சாவித்ரி(காயத்ரி) மந்திரத்தை(யார நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப் போமாக என்ற மந்திரத்தை) உச்சரித் தல். (விதி 102-2)
6. தினமும் அய்ந்து முறை பலிதானம்  செய்தல். (இது இஸ்லாமியர் அய்ந்து முறை தொழுகை செய்தல் போன்றது) மற்றும் வேதம் ஓதுதல் காயத்ரி மந்திரம் ஓதுதல் ஆகியவை பிராமணரின் கடமை ஆகும்.

மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் (4)


- பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.

தற்காலத்தில் பிராமணர்கள் ஆங்கி லேயர் போல கல்வி கற்கிறார்கள் மற்றும் உடை அணிகிறார்கள். மனு தர்மத்தில் சொல்லியது போல் உடை அணிவதில்லை மற்றும் குருகுலத்தில் வேதம் கற்கவில்லை. வேதம் கற்க வில்லை என்றால் பிராமணர் ஆக முடியாது என உறுதிபட மனுதர்மம் கூறுகின்றது. இந்நிலையில் வேதம் கற்காத பிராமணர்கள்  கோவில்களில் பூசை செய்யலாமா என்பதனை வேதம் கற்றவரகள் முடிவு செய்ய வேண்டும். மேலும் பூசை (உருவ வழிபாடு) செய் வது பற்றியோ மற்றும் கோவில் பற்றியோ மனு தர்மத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. மனுதர்ம காலத்திற்குப்பின் தான் கோவில்கள் தோன்றியிருக்க வேண்டும்.
உலகத் தோற்றம் பற்றி மனுதர்மம்:- மனுதனது நூலில் வர்ணாசிரமத் தின்படி ஒவ்வொருவரின் கடமைகளை சட்ட வடிவாகத் தந்தவர். அவர் உலகம் தோன்றியதுபற்றி முதல் அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். 1. இந்த பிரபஞ்சத்தைப் படைக்கும் சக்தி தானாகத் தோன்றிய ஒன்று. காரண காரியங்களுக்கும் ஐம்புலன் களுக்கும் அப்பாற்பட்டது. --- விதி (7).
2. அந்த சக்தி தன் உடலில் இருந்து நீரைப் படைத்தது. அதில் ஒரு விதையை விதைத்தார். (8) ஆனால் அந்த விதை வளர்வதற்கு தேவையான நிலம் ஆகாயம்காற்று மற்றும் ஒளியும் படைக்கப்படவில்லை. பின்னர் அந்த விதை தங்கமுட்டையாக மாறியது. அதிலிருந்து பிரும்மா வெளிவந்தார். நரா என்றால் தண்ணீர். அந்த தண் ணீரை வீடாகக் (அயணா) கொண் டவன் நாராயணா என்பவன்.(10)
3. பிரம்மன் உருவாக்கிய முட்டை ஒன்று ஓராண்டு கழித்து இரண்டாகப் பிளவுப்பட்டது. அதில் ஒரு பாதி  பூமி மறுபாதி சொர்க்கம் இடையில் எட்டுத்திக்குகளுடன் ஆகாயம். (13)
4. பிரம்மனால்படைக்கப்பட்ட பொருள்களுக்குப் பெயர்செயல்பாடுகள் ஆகியவற்றை பிரம்மன் வேதங்களின் படி தந்தான் (21)
5. நெருப்பு காற்று. சூரியனிடமிருந்து மூன்று வேதங்களை (ருக்யஜூர சாம) யாகங்கள் செய்யப் படைத்தான். விதி (23)
அதர்வண வேதம் பிரம்மனால் படைக்கப் படவில்லை. மனிதனால் படைக்கப் பட்டிருக்கலாம்.
6. பின்னர் காலம்கிரகங்கள்ஆறுகள்( நாராயணன் இருக்கும்) கடல்கள். மலைகள் சமவெளிகள் மேடு பள்ளங்க ளை பிரம்மன் உருவாக்கினார். --விதி (24)
7. முதல் யுகத்தில் படைக்கப் பட்ட பொருள்கள் அனைத்தும் அடுத்த யுகத்திலும் சேர்க்கப்பட்டன.(28)
8. உலகம் செழிப்பதற்காகபிரம்மன் தனது வாயிலிருந்து பிராமணனையும தோளில் இருந்து சத்திரிய னையும் தொடையில் இருந்து வைசியனையும் காலில் இருந்து சூத்திரனையும் பிறக்கச் செய்தார். (31)
9. பிரம்மன் தன் உடலை இரண் டாகப் பிளந்து ஒரு பகுதியை ஆணா கவும் மறுபாதியைப் பெண்ணாகவும் படைத்தார். பெண்ணுக்கு விரகதாபம் படைத்தார். (32)
10.பின் பிரம்மன் கீழ்க்கண்டவற்றைப் படைத்தார்---மின்னல் இடி வானவில் எரி நட்சத்திரம் மற்றும் பல (38)
11. பின்னர் பிரம்மன் ---யட்சகர்கள் இராட்சசர்கள் பிசாசுகள் கந்தர்வர்கள் அப்சரஸ்கள் அசுரர்கள் நாகங்கள் பறவைத் தெய்வங்கள் மனித வடிவங்கள் (மனஸ்)---ஆகியவற்றைப் படைத்தார் --விதி (37)
12. பின்னர் பிரம்மன் --கால்நடைகள் மான் கோரப்பல் மிருகங்கள் இராட்ச சர்கள் பிசாசுகள் மற்றும் மனிதர்கள் கருப்பப்பையில் பிறக்கும் பிராணிகள் --ஆகியவற்றைப் படைத்தார் --விதி (43).
13. பிரம்மன் நான்கு யுகங்களைப் படைக்கிறார். அப்போது வெவ்வேறு (நான்கு) யுகங்களுக்கும் வெவ்வேறு வருணங்களுக்கும் வெவ்வேறு கடமைகளை நிர்ணயித்தார். ---விதி (6885)
14. பிரம்மன் படைக்காமல் தானே தோன்றிய மனு தன்னுடைய சாஸ்திரத் தில் சாதி குடும்பம் நாடு வாணிபம் போன்ற அமைப்புகளை உருவாக்கினார்.----- கடைசி விதி (115).
15. பிராமணர்கள் வசிப்பதற்காக திருஷ்டாவதி மற்றும் சரஸ்வதி நதி களுக்கு இடையே ப்ரும்ம வர்த்தம் என்ற நாட்டை கடவுள் படைத்தார் விதி (17-2).
15ஏ. இமயமலைக்கும், விந்திய மலைக்கும் இடையில் மற்றும் மறைந்த சரஸ்வதி நதிக்கும் இடையே உள்ள பகுதி மத்திய தேசம் என அழைக்கப் படுகின்றது விதி 21-2.
15பி. இமயமலைக்கும் விந்தியமலைக் கும் இடையில் மற்றும் கிழக்குக் கடலுக்கும் மேற்குக் கடலுக்கும் இடையே உள்ள பகுதி ஆரியவர்த்தம் ஆகும். விதி (22-2)
16. ஒரு அரசன் என்பவன் எட்டு தெய்வாம்சங்களைக் கொண்டவன் அவை---சந்திரன், அக்னிசூரியன், வருணன் இந்திரன், காற்று, குபேரன், எமன்--- ஆகும் விதி (96-5)
வேதங்களில்இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது என்று கூறப்பட் டுள்ளது. இதற்கு மாறாக முட்டை யிலிருந்து உலகம்ஆகாயம் மற்றும் சொர்க்கம் தோன்றியதாக மனு சாஸ் திரத்தில் கூறப்பட்டுள்ளது ஏற்க தக்கது இல்லை.
டார்வின் கொள்கையின்படி மனிதன் பரிணாம வளர்ச்சி முறையில் குரங்கி லிருந்து பிறந்ததாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் பிரம்மனின் உடலில் இருந்து ஆணாகவும் பெண் ணாகவும் பின்னர் பிராமணனாகவும் சத்திரியனாகவும் வைசியனாகவும் சூத்திரனாகவும் மனிதர்கள் தோன்றி னார்கள் என்பது விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் சமூக நீதி அடிப் படையிலும் ஏற்கத்தக்கது இல்லை

இத்தகைய மனுசாஸ்திரத்தின் அடிப்படையில் மன்னர்கள் பலர் ஆட்சி செய்ததினால் இந்தியக் கண்டம் இருண்ட கண்டமாகவே இருந்தது. பிரம்மன் இந்த உலகத்தைப் படைக்கும் முன் எங்கும் இருள் சூழ்ந்து இருந் தது.ஆனால் அதே இருள் மீண்டும் இந்த உலகத்தை மனுசாத்திரத்தால் சூழ்ந்தது.இந்த இருள் நீக்கும் பகல வனாக பகுத்தறிவுக் கொள்கைகள் தற்போது சட்ட வடிவம் பெற்று வரு கின்றன..

மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் (5)


- பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.

மன்னர் ஆட்சிகளும் மனு தர்ம சாஸ்திரமும்:-  வேத காலத்திற்குப் பின் பாரசீகர்கள் (கிமு 530) மற்றும் கிரேக்கர்கள் (அலெக்சாண்டர் கிமு 327) இந்தியா மீதுபடை எடுத்து வந்ததாலும்  கிமு ஆறாம் நூற்றாண்டில் புத்த சமண மதங்கள் தோன்றியதாலும் ஆரியர் களின் வேத மதத்தில் பெரும் மாற் றங்கள் ஏற்பட்டன. மவுரியர்களின் அசோகப் பேரரசு (கிமு 268 கிமு232) புத்த மதத்தையும் பாலி மொழியையும் பயன்படுத்தி நிர்வாகத்தில் செய்த மாற்றங்களும் வேத மதத்தில் மாற் றங்களை ஏற்படுத்தின. வேத மதத்தில் பல புதிய கடவுள்கள் உருவாக்கப்பட் டனர். இலக்குமி, விஷ்ணு (வேத காலத்தில் விஷ்ணு என்ற சொல் சூரி யனைக் குறிக்கும்) சிவன், சுப்ரமண்யம் போன்ற கடவுள்கள் உருவாக்கப்பட் டனர். மேலும் விஷ்ணு மனிதனாக அவதரித்த கதைகள் எழுதப்பட்டன. மொத்தம் உள்ள 10 அவதாரங்களில் முக்கியமானவை--- பலராமன் (6) இராமன் (7) கிருஷ்ணன் (8ஏ) பல ராமன் (8பி) புத்தர் (9) கல்கி(10) ஆகும். (ஆதாரம்  இந்து மத சமயக் கோட் பாடுகள் என்ற நூல். பதிப்பு இராம கிருஷ்ண மடம்). இவ்வாறு பல நாடு களில் பரவியிருந்த புத்த மதத்தை நிறுவிய புத்தரை விஷ்ணுவின் 9ஆவது அவதாரமாக சேர்த்த பின் வேத மதம் புத்துயிர் பெற்றது. புதிய வைதிக அரசு கள் தோன்றின. இந்த காலகட்டத்தில் கிமு100 கிமு200இல் மனு தர்மம் நூல் எழுதப்பட்டது. இந்த மனு உலகம் தோன்றிய போது சுயம்புவாக தோன்றிய முதல் மனிதன் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலே சொல்லப்பட்ட காரணங்களின் அடிப்படையில் பல அரசுகள் கிமு 185 முதல் கி.பி. 1857 வரை உருவாகின. அத்தகைய அரசு களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
1. புஷ்ய மித்ர சுங்கன் முதல் சுங்க வம்சம் (கிமு 185- கிபி 73) 2. சிமுகர்கள் 3. இந்தோ பாரத்தியர்கள் (கிபி 21-_130) 3. ஏ. மேற்கு சத்ரபதிகள் (35-_405) 4. குஷானர்கள் ( கிபி 60-_240) 5. சசானியர்கள் (230_360) 6. வகடகர்கள் (250-_57) 7. களப்பிரர்கள் (250-_600) 8. குப்தர்கள் (280_-550) 9. கடம்பர்கள் (345_-525) 10. மேற்கு கங்கர்கள் (350-_1000) 11. விஷ்ணு குண்டினர்கள் (420-_624) 12. சாளுக்கியர்கள் (543-_743) 13. உறர்ஷர்கள் (590-_647) 14. பால வம்சம் (750_-1154) 15. யாதவர்கள் (850-_1334) 16.சோலங்கிகள் (942-_1244) 17. உறாய்சலர்கள் (1040_-1346) 18. காகத் தியர்கள் (1083_-1323) 19.பல்லவர்கள் (575-_893) 20. சோழர்கள் (850_-1279) (டில்லியில் சுல்தான்கள் ஆட்சி தொடங்கியது) 21. விசய நகரமன்னர்கள் (1336-_1550) 22. நாயக்கர்கள் (1530_-1736) 23. மராட்டியர்கள் (1550-_1856).
இந்த மன்னர்களில் சிலர் குறுநில மன்னர்கள் சிலர் வைதிக மதத்துடன் புத்த சமண மதங்களையும் ஆதரித்தனர். சிலர் புத்த சமண மதங்களை மிகவும் கடுமையாக எதிர்த்தனர். உதாரணம் பாண்டிய மன்னன் காலத்தில் திருஞான சம்பந்தரால் ஆயிரக்கணக்கான சமணர் களை கழுவேற்றியது ஆகும். ஆதி சங்கரர் தர்க்க வாதத்தில் தோற்ற புத்த சமணர்களை கொடுமைப்படுத்தியதும் ஆகும். ஆனால் எந்த மன்னரும் வைதிக மதத்தை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குப்தர்கள் காலத்திற்கு முன்பே வைதிக மதம் மறுமலர்ச்சி துவங்கிவிட்டது என்பதையும் அறியலாம்.
மனுசாஸ்திரத்தைப் பின்பற்றிய மன்னர்கள் பிராமணர்களுக்குப் பொன் னும் மணியும் ஆடை ஆபரணங்களும் நிலங்கள் வீடுகள் தானமாக அளித் தார்கள். மன்னர் அளித்த தானங்களை செப்பேடுகளில் கல்வெட்டுக்களில் கீழ்கண்டவாறு பொறித்தார்கள். இந்த சொத்துக்களை பிராமணர்கள் சூரிய சந்திரர்கள் உள்ளவரை அனுபவிக்க வேண்டியது.இந்த சொத்துக்களை அபகரிப்பவர்கள் ஏழு ஜென்மங்களிலும் சாக்கடைப் புழுக்களாகப் பிறப்பார்கள் மற்றும் நரகத்திற்கும் போவார்கள். இவ்வாறு தானமளித்த மன்னர்கள் இறந்த பின் அல்லது வேறு அரசுகள் அமைந்த பின்னரும் பிராமணர்கள்  சொத்துக்களை அனுபவித்து வந் தார்கள். இது தற்கால அரசுகளினால் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
மேலும் வட இந்தியப் பிராமணர் களை (ஆரியவர்த்தப் பிராமணர்களை) விட பஞ்சமதிராவிட பிராமணர்கள் (குஜராத் மகாராட்டிரம்ஆந்திரா கர்நாடகம் மற்றும் தமிழ்நாடும் கேரளமும் இணைந்த பகுதியில் உள்ளவர்கள்) மன்னர்களால் தனியே அக்ரகாரம் என்ற பகுதியில் குடிய மர்த்தப்பட்டனர் (அகரம் என்றால் பார்ப்பனசேரி என்று பொருள்)
முடிவுரை
இந்த உலகம் இயங்குவது மதச் சடங்குகளாலும் அர்ச்சகர்களாலும் மட்டும் இல்லை. இதை விளக்கும் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.
1. பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்பதால் கடவுளின் காட்சிக் கிடைத்துவிடும் என்றால் வவ்வால் களுக்கும் குரங்குகளுக்கும் ஏன் கடவுளின் காட்சி கிட்டவில்லை?
2.புனித நீர்நிலைகளில் நீராடுவதால் கடவுளைக் காணலாம் என்றால் மீன்களால் ஏன் கடவுளைக் காண முடியவில்லை?
3.மனைவியைத் துறப்பதால் கடவுளை அடையலாம் என்றால் அலிகளால் ஏன் கடவுளை அடைய முடியவில்லை?
இதைச் சொல்லுபவர் தந்தைப் பெரியாரின் நாத்திக இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல. ஆனால் இந்த பாடலைப் பாடியவர் பக்தை மீராபாய் ஆவார். மேலும் அவர் கடவுளை அடைய பக்தி மார்க்கமே சிறந்தது என்கிறார். ஆனால் பக்தி மார்க்கத் தினால் சூத்திரப்பட்டத்தினால் ஏற் படும் இழிவுகள் நீங்குமா? 4.சுங்க வம்ச ஆட்சி முதல் நாயக்கர்கள் காலம் (சுமார் 2000 ஆண்டுகள்) வரை தொடர்ந்த மனுதர்ம ஆட்சிகளினால் ஏற்பட்ட மிகப் பெரும் பாதிப்புக்களை நீக்க ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நடந்த மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக்கட்சியினரும் மற்றவர்களும் சூத்திரர்கள் கல்வி கற்கவும் ஏழை மாணவர்கள் மதியஉணவு பெறவும் மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதப் படிப்புத் தேவையில்லை எனவும் தேவதாசி முறையை ஒழிக்கவும் இந்துக் கோவில்களை நிர்வகிப்பதில் சூத் திரர்கள் பங்கு பெற இந்து சமய அறநிலையத்துறையை அமைக்கவும் ஆணைகள் பிறப்பித்தனர்.
5. மாறாக மாகாண தேர்தலில் வெற்றிப்பெற்ற இராசாசி சூத்திரர்கள் படித்து வந்த பல பள்ளிகளை மூடினார். புன்னர் 1952-ல் ஆட்சி அமைத்தபோது சூத்திரர்களின் பள்ளிப் படிப்பை பாதிக்கும் வகையில் குலக் கல்வி முறையைக் கொண்டு வந்தார் இதனை முறியடிக்க திராவிட இயக்கங் கள் எதிர்த்துப் போராடின. இதன் விளைவாக இராசாசி பதவி விலகினார் பச்சைத் தமிழர் காமராசர் பதவி ஏற்றார்.
6.மாகாணத் தேர்தலில் வெற்றிப் பெற்ற நீதிக்கட்சி ஆட்சியைத் தொடர்ந்து 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளின் ஆட்சி  நடை பெறுகின்றது.
7.மாகாண தேரதலில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் முஸ்லீம் லீக் கட்சிகள்தான் பின்னர் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் பெற காரணமாயிருந்தன.
8. மதத்தாலும் மொழியாலும் அடிமைப்படுத்தபட்ட மக்களின் இழிவைப் போக்கும் சக்தி மக்களிடம் தான் உள்ளது. இதுதான் இலங்கையின் மாகாண தேர்தலில் நடந்துள்ளது.
9. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையைக் கடைப்பிடித்ததால் தான் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. மனுதர்ம ஆட்சி அல்லது இந்துத்துவா ஆட்சி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எதிரானது மற்றும் முன்னேற்றத்திற்கு எதிரானது. மேலும்நாடு முழுவதும் ஒரே மதம் ஒரே மொழி என்ற கொள்கையால் இந்தியாவில் இராஜ பக்சேக்கள் தோன்ற வாய்ப்பு உண்டு. இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவிற்குப் பாடமாக அமையும்.
10. வீரமாமுனிவர் தனது சதுர கராதியில் பண்டை காலத்தில் இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சீனம் யவனம் சிங்களம் போன்ற தேசங்களும்  அடங்கும் எனக் கூறு கின்றார். தற்போது சிங்களவர்கள் ஆளும் இலங்கையில் மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால் 1972-ல் சிறீமாவோ காலத்தில் ஒற்றைஅரசு மட்டும் நாட்டை ஆளும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப் பட்டது. இதனால் மாகாணங்களில் பொம்மை அரசுகளே ஆட்சிக்கு வந்தன. இதே நிலை தான் இந்தியாவில் மனுதர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் மய்ய அரசில் ஒரு மத ஆட்சி அமையும் பொழுது ஏற்படும் என உணரலாம்.
(நிறைவு)
-விடுதலை ஞா.ம.,14.12.13

ஞாயிறு, 8 நவம்பர், 2015

திதி கூறும் மந்திரம் என்ன?

திதி கூறும் மந்திரம் என்ன?


மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம.
பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழு வதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னி யில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்
(ஆதாரம்: சுவாமி சிவானந்தா சரசுவதியின் ஞான சூரியன்)
தன் தாயைச் சந்தே, கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி, ஒழுக்கக் கேடும் விபச்சாரமும் தானே பார்ப்பனீயம்!
-விடுதலை ஞா.ம.9.8.14

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

பார்ப்பனர் நடத்திய பசுவதை அய்தேரயப்ராஹ்ணம் கூறுகிறது

Image result for கோமேத யாகம்
அய்தரேய ப்ராஹ்ணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:
யஜ்னேவை தேவா - ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோக மாயம்ஸ்தே பியயுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ் சானுப் ரஞ்ஞாஸ் யந்தீதி (அய்தரேயப்ராஷ் மணம்த்ஷதீய பஞ்சிகா பிரதம காண்டம்)
இதன்பொருள்:- தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தார். ஆதலால், மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர் யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும் . யூபம் - யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.
இதன்பின் யாகத்தால் உயிர்களைக் கொல்லக் கட்டளையிடுகிற மந்திரமாவது:-
தைவ்யா:- சாமி தார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ராதா ஸ்கர்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மத மாலா பந்த உதி சீனாம் அஸ்பபதோ நிதித்தாமஸுர்யம் சக்ஷீர்க்ம ப்தாத் வாந்தப் ராண  மன் வஸ் ருஜ தாந்திரி க்ஷமஸும் திச ஸ்ரோத்திரம், ப்ருதிவிசரீம்
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது இந்தப் பசுவை எனக்கு கொடுங்கள்.
இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும் படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான்.  அதன்பின் சுரா இடா ஸுனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித்துச் சதையை அரிந்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.
இந்த பசுவைப் பங்கிடும் முறை ஞான சூரியன் முதல் பக்கத்தில் மேற்படி மந்திரமும், அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபதப் ராஹ்மணம் என்னும் வேத நூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு சுவர்க்கத்தை அடைகிறது என்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது:
பார்வை நியாமான; ஸம்ருத்யும்  ப்ரா பஸ்யத் ஸதேவான் நான் வகா மயதைதும் தம் தேவா அப்ரூ வன் கம் னேஹிஸை வர்க்வத்வர் லோகம் கமயிஷ் யாம இதி
(அய்தரேயப் ராஹ் பஞ்சிகா காண்டம் 6)
பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தை காண்கிறது; மரணத்தினின்றும் தேவர்களை காண்கிறது.
தேவர்கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-
அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேதத் ப்ராணன் தாதிஸ் யேன மாஸ்ய வக்ஷ கருணுதாத் ப்ரசஸா பஹீ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ வகவேஷாரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்காயஸ்கா அனுஷ்ட யோச்யா வயதத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-
உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய பஞ்சி 2 க6)
பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்
சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)
பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே.
தொகுப்பு: பெ.சுந்தரராசன்.
-விடுதலை,22.2.13

சனி, 17 அக்டோபர், 2015

"பார்ப்பான் மாமிசப் பிராணியே"!

Image result for புனிதப் பசு
வரலாறும் இதிகாச புராணங்கள் சொல்லுவது "பார்ப்பான் மாமிசப் பிராணியே"! மேலும் அவர்கள் பசு கறி உணுவதை முக்கிய ஒன்றாக கருதி இருந்தார்கள். இந்து மதம் எதன் மீது கட்ட பட்டுள்ளதோ அவைகளே புலால் உண்ணுதல் / மாட்டு இறைச்சி உண்ணுதலை தடை செய்ய வில்லை என்பது அப்பட்டமான உண்மை. அடுக்கடுக்கான ஆதாரங்கள் வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!

1) பசுவைக் கொல்லும் போது
  ”ஹோதா” என்ற புரோகிதர், ‘அத் ரிகோ சமீத்வம் ஸுசமி சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரிகாஉர் இதித்ரிப் ரூயத்’ என்று சொல்ல வேண்டும். - நூல் : ஐதரேய பிராஹ்மனம் - (பஞ்சிகா2, கண்டம் 7)
பொருள் ‘நன்றாக அடித்துக் கொல்! கொல்! கொல்! அடிப்பதை நிறுத்தாதே! என்று கூறியவாறு பசுவைக் கொல்ல வேண்டும்.

2) பசுவைக் கொல்லும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
 அதாஸ்யா பிராணன் விஸ்ரம் ஸமானா நனுமந்த்ரயதே ஹே புருஷ்ய்ய ஸயாவரீ ராஜகவீ தவப்ராணம் சிதிலம் க்ருத வானஸ்மி பித்ருன் உபேஹி அஸ்மின் லோககே ப்ரஜா புத்திராதிகயா ஹைஷேமம் பிராய - நூல்: தைத்ரீய ஆரண்யகம் (அத்தியாயம் 6, கல்பசூத்திரம்)
பொருள் : பசுவை கொல்லும் போது சொல்ல வேண்டியது: ‘ஓ புரு ஷனுக்குரிய ஸயாவரியே! பசுமாடு களுக்கு தலைவி (ராஜகவீ)யே நான் உனது உயிரை வாங்குகின்றேன், நீ உனது மூதாதை (பித்ருக்)களை அடையக் கடவாய். இந்த உலகில் உனது சந்ததிகளுக்கு நலத்தைக் கொடுப்பாயாகபசுவும், காளையும் புனித விலங்கு கள். எனவே அவைகளை கண்டிப்பாக உண்ண வேண்டும். - நூல் : ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (1:5, 14:29)

3) ‘தேன் வனடு ஹெளபஷ்யம்’
பொருள் : மாடும், எருதும் உணவுக்காத்தான்! அறிவிப்பவர் : சுவாமி சிவானந்த சரஸ்வதி நூல் : மத விசாரணை (பக்கம் 105,106)

 ‘கௌசிக முனியின் ஏழு குமாரர் களும் ஒரு மனிதனின் பசுவைக் கொன்று தின்று விட்டதினால் மோட் சம் அடைந்தனர் என்று 1863ல் அச் சான சித்த மத நிரூபன் பக்கம் 334ல் உள்ளது. பிறருடைய பசுவை திருடி சாப்பிட்டவர்கள் கூட மோட்சம் பெற்றதாக வேதங்கள் கூறுகின்றன. யாகத்தில் கொன்ற பசுவின் இறைச்சியை 36 பாகங்களாக பங்கிட்டு அதனை அனைவரும் உண்டனர். இவ்வாறு செய்வதால் கொல்லப்பட்ட விலங்கிற்கு சொர்க்கம் கிட்டும் என்று நம்பினர். வேதகாலக் கட்டத்தில் ஆரியர்கள் மாமிச உணவை குறிப் பாக பசு, காளை, எருது முதலி யவற்றின் இறைச்சியை பயன்படுத்திய தற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

4) சணல் இட மருகு வேதங்கள் ஓர் ஆய்வு (பக்கம்79) வேள்விக்கு படைக்கப்பட்டது. மந்திரப்பூர்வமாய் கொல்லப்பட்டது. விதிப்படி வரிக்கப் பட்டது. ஆசார்யனால் பணிக்கப் பட்டது. ஆகிய புலால் உணவை பிராமணன் உண்ணலாம். அந்த உணவு இல்லையெனில், தன்னுயிர்போகும் என்ற போதும் புலால் உண்ணலாம். ”உண்ணமாட்டேன்!” என்று மறுப்பது தான் பெரும் பாவம்! - நூல் : மனு தர்மம் (பக்கம் 100,101)

5) சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப் பட்டது. விஜனணானவன் தோஷமென்று மாம்ஸத்தைப் புசியாவிட் டால், அவர் 21 பிறவி (ஜென்மம்) பசுவாய் பிறப்பான். - நூல் : மனுஸ் மிருதி (அத்தியாயம் 43 சுலோகம் 35)

6) பசுவைக் கொன்று அந்த கொழுப்பை எடுத்து யாகம் (ஹோமம்) செய்ய வேண்டும். - (அஷ்டகாவிதானம் 1:24,26)

7) எந்தப் பசு கொல்லப்பட்டதோ அதன் இறைச்சியை சமைத்து பிரா மணர்களுக்கு படைக்க வேண்டும். - நூல் : ஆஸ்வலாயண க்ருஷ்ய சூத்ரம் (2,5,27)

8) விருந்தினர் உபசரிப்பில் மது, மாமிசம், இல்லாமல் (பசு அல்லது எருதின் இறைச்சி இன்றி) நடத்தக் கூடாது. - நூல் : மாதவ க்ருஹ்ய சூத்திரம் 1,9,200

9) ‘காளையின் இறைச்சி விருந்தினர் உபசாரத்திற்கு உகந்தது’ என வாஜஸ நேயன் கூறுகின்றார். நூல் : வேதங்கள் ஓர் ஆய்வு பக்கம்90
திவோதாசன் என்னும் பாரத மரபின் வேந்தன் பல நூறு காளை களைக் கொன்று விருந்தளித்ததினால் பெருமையுடையவனாய்த் தன்னை அதிதிக்வா எனக் கூறிக் கொண்டான். - அறிவிப்பவர் : சி.ஸா.ஸ்ரீ நிவாசாச்சாரியார். நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம்: பக்கம்43)

10) மாமிசத்தோடு மதுவும் கொடுக்க வேண்டும் என்ற தேவதிதியை அனு சரித்து வேத மறிந்த விருந் தாளிக்கு ஒரு பசுங்கன்றையோ, காளை மாட் டையோ, வெள்ளாட் டையோ வீட்டில் உள்ளவர்கள் பலி கொடுக்கிறார்கள். அதுதான் தர்மம் என்று தர்ம சூத்திரங்கள் கூறுகின்றன. - அறிவிப்பவர் : ராஜாஜி நூல் : உத்தாராம சரிதம்

11) சர்மண்வதி (சம்பல்) நதிக்கரை ஷத்திரிய அரசன் தந்திதேவன் அவ ருடைய விருந்தினர் மாளிகையில் தினசரி 2000 பசுக்கள் கொல்லப்பட் டன. கொல்லப்பட்ட பசுவின் ஈரத் தோல்கள் சமையல் அறைக்கு அரு கிலே குவிக்கப்பட்டிருக்கும். அதிலி ருந்து கசியும் நீர் நதிலாகப் பெருகி ஓடும். (சர்ம தோல்; ணவதி வெளிப் பட்டு ஓடுதல்) சர்மண்வதி என்ற பெயர் தோன்றியது.

12) ரந்தி தேவரு டைய மாளிகையில் விருந்தினர் களுக்காக இந்தப் பசு மாமிசங்களைச் சமைப்பதற்கு 2000 சமையல் காரர்கள்இருந்தார்கள். ஆயினும், பிராமண விருந்தினர்களின் கூட்டம் அளவுக்கு மீறி இருந்த காரணத்தால், ‘மாமிசம் குறைவாக இருப்பதால் தனய செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’ என்று விருந்தினர்களைச் சமையல்காரர்கள் கேட்டுக்கொள்ளும் நிலைமை கூட ஏற்பட்டது. - நூல்: வால்காவிலிருந்து கங்கை வரை (பக்கம் 297, 298)

13) சோம்லி’பூஷா’ தேவதைகளின் பொருட்டு பசுவைக் கொல்ல வேண்டும். நூல் : ஸாம வேத தாண்ட மஹாப்பிரஹ்மனன் 23:14:4
அஸ்வின, ஸாரஸ்வத, இந்த்ர, இம்மூன்று தேவதைகளின் பொருட்டு பசுவைப் பலியிட வேண்டும். நான்காவதாக பிரகஸ்பதிக்கும் பசு வேண்டும். - நூல் : ஆகஸ்வலாயன கலிப திரௌத சூத்ரம் (அத்தியாயம் 3, கண்டிகை 9)

14) அவர்கள் மயக்கம் தரும் சோம பானத்தையும் தானியங்களையும் இறைச்சியையும் தேவர்களுக்குப் படைத்து வழிபட்டனர். - நூல் : இந்திய வரலாறு பக்கம் 33 ஆசிரியர் : டாக்டர் சுப்பிரமணியன்

15) மகாபாரத காலத்தில் சிறப்பு விருந்தினர்களுக்கு மாட்டிறைச்சி கன்று இறைச்சி முதலியன வழங்கப்பட்டிருக்கின்றன. - ஆசிரியர் : ஜவஹர்லால் நேரு, நூல் : டிஸ்கவ்ரி அஃப் இந்தியா

16) அறிவில் மிகுந்த கக்லயஜுர் வேதம் இயற்றிய யாக்ளு வல்கியமுனிவர், காளைகளின் தசையை விரும்பி உண்டார். - ஆசிரியர் : சிவா ஸ்ரீ நிவாசாச்சாரியார், நூல் : இந்திய வரலாறு (முதல் பாகம், பக்கம் 43)

17) ‘பிரம்மா மாமிசம் புசிக்கும் படி போதித்தார்! கபில முனி - நூல்: சாதாரண இந்து மார்க்கம் பக்கம் 93

18) இந்திரனே! இதுதான் பலிபீடம், இதுதான் பலியிடக் கொண்டு வந் துள்ள பசு, இதோ சோமபானம் (சாரயம்) இந்திரனே! இங்கே உட் காரவும், சோமபானத்தைக்குடிக்கவும்.(நூல் : ரிக்வேதம் 1,77,4)

19) இந்திரனே! இந்த புரோடசத்தை (மாடு அல்லது ஆட்டின் விதை) தின்னவும். எங்களுக்கு நூற்றுக்கணக் கான ஆயிரம் கணக்கான பசுக்களை அளிக்கவும். நூல் : ரிக்வேதம் 8,28,1

20) இந்திரனாகிய என்னை வணங்கு கிறவர்கள் எனக்கு பதினைந்து காளைகளையும் இருபது காளையும் சமைக்கிறார்கள். அதிலுள்ள கொழுப் புக் கறிகளை விரைவாக நான் விழுங்குகிறேன். அவை என் வயிற்றை நிரப்புகின்றன. இந்திரன் எல்லா உலகத்திற்கும் தலைவனாய் இருக்கின்றான். நூல் : ரிக்வேதம் 10,86,14

21) அக்கினியே! உனக்காக பசுவின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட தும், மிக்கச் சத்துள்ள கொழுப்புக்கறி யால் செய்யப்பட்ட உணவுப்படை யலை உனக்கு அளிக்கிறோம். உனக்காக கொழுப்புரசம் சொட்டுகிறது. அவற்றைத் தேவர்களுடன் பங்கிடவும். நூல் : ரிக்வேதம் 3,21,1 முதல் 5 வரை அக்னி ஷோத்திரஹோமம் செய் திடப் பயன்படுத்தும் பத்துப் பொருள் களுள் ஒன்று மாமிசம். நூல் : தேவாரம் தேவாரம் வேதசாரம் பக்கம்38,39

22) பசுவைக் கொல்ல வேண்டும். ஆஸ்வலாயன கல்ப சிரௌ தஸுத்ரம் (நூல் : அத்தியாயம் 3 கண்டிகை 7)

23) மஹாவ் ரத யாகத்திற்கு எருதைக் கொல்ல வேண்டும்.
ஏகாதசி என்னும் யாகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு பசுவீதம் கொல்ல வேண்டும். ‘ஆஸ்வலாயன சிரௌதஸுத்ரம் (நூல் : உத்ரஷ்டகம் 7வது கண்டிகை)

24) பசுவின் மாமிசம் கொடுக்கிறதினால் பதினொரு மாதம் வரை பிதுர்கள் இறந்தவர்கள் திருப்தியாயிருக்கிறார்கள்.
கௌசிகர் புத்திரர் குருக்குருசி யின் சீடர்கள் பசுவின் மாமிசத்தை சிரார்த்தத்தில் புசித்தார்கள். நூல் : சிவபுராணம் தர்ம அத்தியாயம் 16 : அனுஹ் 3 வாஜ்பேய் என்ற யாகத்தில் பசுக் கள் கொல்லப்பட்டு உப்பு, புளிர் பாடாமல் சாப்பிட்டனர். நூல் : தெய்வத்தின் குரல் தீக்கதிர் 22.09.2003 பக்கம் 3)

25) ‘ஆரபத்வமுத மனுஷ்ய இத்யாஹ அன்வேனம் மாதா மன்ய தாமனு பிதானுப்ரதா ஸகர்ப்யோனு ஸகா ஸயூத்ய இதி ஜனித்ரைரேனவனம் தத்ஸமனு மத மால பந்த உதிசீனாம் அஸ்யபதோ நிதத்தாத் ஸுர்யம் சக்ஷுர்கமயதாட் வாந்த ப்ராணமன் வஸ்ருத தாதந் திரி க்ஷமக்ஷும்திச ஸ்ரோத்ரம் ப்ருதிவீ சரீரம் நூல் : ஐதரேய ப்ராஹ்மணம் (பஞ்சகா 2, கண்டம் 6)
பொருள் : இம்மந்திரத்தினால் பசுவின் தாய், தந்தையரைக் கேட்டுக் கொள்வதா வது, இந்த பசுவை எனக்குக் கொடுங் கள். இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர், ‘அத்வர்யூ’ என்னும் தலை மைப் புரோகிதருடைய கட்டளை யைப் பெற்றுக் கொண்டு, பசுவை அழைத்துக் கொண்டு போய், வடக்கு திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து ‘கமிதா’ என்னும் பசுவைக் கொல்லும் புரோகிதர் ‘முஷ்டி’ என்னும் குறுந்தடி யால் பசுவினுடைய கழுத்தில் அடித் துக் கொலை செய்வார். அதன் பின் ‘கரா’ ‘இடா’ ‘ஸுனு’ ‘ஸ்வதீத்’ என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவைக் கிடத்தி, தோல் உரித்து, சதையை அறுத்தெடுத்து, சிறிது நெருப்பிலிட்டு, மீதியுள்ள மாமிசத் தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்வார்கள். - அறிவிப்பவர் : ங.ஃ.கேலுண்ணி நாயர் என்ற சுவாமி சிவானந்த சரஸ்வதி நூல் : மதவிசாரணை, பக்கம் 67:69

26) உலகத்தில் மாமிசத்தின் ருசியைப் போல் வேறொரு வஸ்துவுமில்லை. மாமிசத்தினால் தேகபலம் வளர்கிறது. இரத்தம் உற்பத்தியாகிறது. மாமிசத்தை விட நேர்த்தியான வேறொரு ஆகார மில்லை என்று ராஜா ஜதேஷ்டர் அவர்கள், பஷீம்ஜீ என்பவரை நோக்கி மொழிந்தார். நூல் : மகாபாரதம், சாந்தி பர்வம், அத்தியாயம் 8 பக்கம் 1543

27) வடை முக்கிய பலகாரங்கள், பாயாசம் , கிழங்கு, ருசியுள்ள இறைச்சி, நறுமணமுள்ள நீர் இவைகள் பிராமணர்களுக்கு உரியன. (மனு .அத்.3சு227)ஒரு பிராமணன் மந்திரத்தினாற் கொல்லப்பட்ட மிருகாதிகளின் மாமிசத்தைப் புசிக்கலாம்.(மனு அத் 5. சு.27)

28) உயிருக்கு ஆபத்து நேருங்கால் புசிக்கத்தக்க பிராணிகளை நாள்தோறும் புசித்த போதிலும் தோஷத்தை அடையமாட்டான். (மனு அத் 3. சு.10) இன்ன இன்ன மாமிசத்தால் சிரார்த்தம் செய்தால் பிதுர்க்கள் இவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்ற விவரம் எள், செந்நெல், அரிசி, உளுந்து, நீர், கிழங்கு , கனி இவற்றால் மனித பிதுர்க்கள் ஒரு மாதம் திருப்தியடைவர். மீனுணவால் இரு மாதங்கள் மான் மாமிசத்தால் மூன்று மாதங்கள் - செம்மறியாட்டுப் புலாலால் நான்கு மாதங்கள், பட்சி மாமிசத்தால் அய்ந்து மாதங்கள் பிதுர்த்திருப்தியாகும்.

29) வெள்ளாட்டின் மாமிசம் ஆறு மாதம்- புள்ளிமான் புலால் ஏழுமாதம், கருப்பு மான் மாமிசம் எட்டுமாதம், கலைமான் மாமிசம் ஒன்பது மாதம். முள்ளம்பன்றி, காட்டெருமைக் கடா இவற்றின் மாமிசத்தால் பத்து மாதங்கள், முயல், ஆமை, இவற்றால் பதினோரு மாதங்கள்.பசுவின் பால், தயிர், நெய், இவற்றால் ஒரு வருடம். இரண்டு காதுகளும் நீரில்பட மூழ்கிக் குடிக்கின்ற கிழ வெள்ளாட்டுக் கடா மாமிசத்தால் பன்னிரண்டு ஆண்டுகள்.

30) அந்தந்தத் காலத்தில் விளைகின்ற காய்கறிகள், வாளை மீன், கட்க மிருகம், சிவந்த ஆடு இவற்றின் மாமிசத்தாலும் காட்டில் முளைக்கின்ற செந்நெல் அரிசியினாலும் செய்தால் எல்லையற்ற காலமும் பிதுர்க்கள் சிரார்த்தத்தால் திருப்தியுறுகின்றனர். மழைக் காலத்து புரட்டாசி தேய்பிறை பதின்மூன்றாம் நாளில் தேனாலும் பாயசத்தாலும் சிரார்த்தம் செய்தால் குறைவறத் திருப்தியடைவர். (மனு. அத் 2. சு 267 முதல் 273 வரை) சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணன் மாமிசத்தைத் தோஷமென்று புசியாவிட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான். (மனு. அத்.5.சு 35)
Original article : https://www.facebook.com/TRafeequlislam/posts/611110262354246

பசுக்கறியை மண்டி சாப்பிட்ட பார்ப்பனர்கள்



இந்த மறைநான்கில் இவர்களின் பலியிடும் நிலை வளர்ந்த நிலையைக் காண்போம். வடதுருவப்பிரதேசத்தில் திரிந்தபோது குளிர்ப்பிரதேசத்தில் குளிர்காலத்தில் குளிர் தாங்க முடியாமல் இருந்தபோது குகைகளில் நுழைந்து தீ உருவாக்கி தீ காய்ந்தனர். அப்பொழுது அவர்களுக்கு உணவாகக் கிடைக்கக் கூடியது. காட்டுப்பசு, காட்டுக்குழிமுயல்கள், காட்டுப் பன்றிகள் மட்டுமே.
அங்குத் தானி யங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால், பசு, குழி முயல்களையும் பன்றிகளையும் குளிர் காலத்தில் மூட்டிடும் தீயில் காய்ந்த போது அதில் அவற்றை வாட்டி கொன்று உண்டனர். அப்போது அவர்கள் பசுவின் பாலும் பசுவின் கறியும் மற்றைய எல்லா உணவு களைவிட மிகுந்த சுவையானது என்று கருதினர். இதனைப் பிற்காலத்தில் எழுத்துரு பெற்ற அதர்வண மறை குறிப்பிடுகிறது.
அவர்கள் உலோகம் கிடைக்காமல் நாடோடிகளாக இருந்த நிலையில் அல்லது கற்கத்தி முதலிய கருவி கிடைக்காத போது அவற்றை மரக்கட் டையால் அடித்து கொன்று தின்றனர். பல குடும்பங்களாக இருந்தபோது அவற்றைப் பிரித்துக் கொண்டனர்.
சமித்ரசாலா
வளர்க்கப்பட்ட பசுவைக் கொலை செய்யும் இடத்தின் பெயர் சமித்ரசாலா ஆகும். அங்குப் பசுவை அழைத்துக் கொண்டு போய், வடக்குத் திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து சமிதா என்னும் பசுவைக் கொல்லும் புரோகிதர் முட்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வார். இரும்பு கண்டுபிடிக்காத காலத்தில் ஆரியர்கள் பசுவைக் கொன்று வந்தனர்.
கூரிய கத்தி இல்லாமல் இருந்ததால் தீயில் வாட்டிய பசுவைக் கையால் பிரித்துக் கொண்டனர் என்பதை உணர்த்துவதாக ஆரியர்கள் பசுவை பிரித்த முறை இருக்கிறது.
கறி துண்டாடுதல்
மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும்.
பின்கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும்.
முன்கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும்.
தோளிலிருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு இருபத்தாறு துண்டு களாக அறுத்தெடுக்க வேண்டும்.
பங்குபோட்ட பொழுது தங்கள் உணவினைத் தீயில் வாட்டி உண்ட தால் அதனை வணங்கினர். விறகிலி ருந்தோ கல்லில் இருந்தோ தீயாகமூட் டும்போதம் தீயை வளர்க்கும் போதும் அதனை ஆசையாக வணங்கினர். அதனைத் தாங்கள் உண்ணும்,  பசு, பன்றி, முயல், கறியை உண்ணவும் வேண்டினர். இவற்றின் கறியைத் தாங்கள் வளர்க்கும் தீ சாப்பிட்டதாகத் தவறாகக் கூறவும் செய்தனர்.
நாடோடியாக மலைப்பகுதியில் வாழ்ந்த காலத்தில் ஆரியர்கள், தங்கள் உணவைத் தீயில் வாட்டி உண்ட போதிலும் சுவைக்காக வேறு பொருளை அதனோடு சேர்த்து அவர்கள் உண்டதில்லை.
ஆரியர்கள் சூடான கறி இரசத்தைப் பருகி வந்தனர். இந்த இரசம் இந்திய அய்ரோப்பிய ஆரியர்கள் ஓரிடத்தில் இருந்தபோது அவர்களின் முக்கிய குடிரசமாக விளங்கி வந்தது. அந்தக் கறி இரசத்திலிருந்து நெய் தனியாகப் பிரித்து எடுக்கவும் கற்றனர். அந்த நெய்யை வைத்திருந்து உண்பதால் உடல்நலமாக இருப்பதை அறிந்து வந்தனர். மிகுதியாகச் சேமிக்கப்பட்டு இருந்ததால் அவற்றை உணவில் சேர்த்து உண்ணும் நிலை உருவானது.
பசுவின் நெய் உபரியாகக் கிடைத்த போது அதனை மட்டும் மறுசுழற்சி யாக உணவினில் சேர்த்து உண்டனர். நெய்யிலே வறுத்தல், பொரித்தலைத் தவிர வேறெந்த சுவைகலவையும் ரிக் மறைக்கால ஆரியர்கள் உபயோகப் படுத்தவில்லை. இதனை நான்கு மறை உணவு பழக்க வழக்கங்கள் வெளிப் படுத்துகின்றன.
பலியும், சமுதாயமும்
ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆண் ஆகிய தந்தையே பலியைக் கொடுக்கும் நிலையில் பெண் ஆகிய தாய் நூல் நூற்பவளாக இருந்தனர். அவ்வாறு ஆண்கள் உணவிற்கு ஆட்டையும் மாட்டையும் வேட்டையாடச் சென்று நாள் முழுவதும் காலத்தைச் செலவழித்ததால் வீட்டில் இருந்த ஆரிய பெண்கள் ஆட்டு ரோமத்தைச் சீர் செய்து அதனைக் கொண்டு ஆடைகள் தயாரித்தார்கள்.
கறி உணவ தீயில் வாட்டி உண்ணப்பட்ட நிலை மாறி, வறுத்தல் பொறித்தல் நிலை வந்தபோதிலும் அவை அதிக நாட்களுக்குக் கெடாமல் இல்லாததால் அவை வீணாகின. அதனால் பல விலங்குகளை அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த நிலை மாறி வளர்க்கப்பட்ட விலங்குகள் அதிகமாக இருக்கும் போது அவற்றை உண்ணும் போது மற்றைய ஆரியர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் கொண்டவர் களாக மாறினர்.
இதனைக் குதிரைக் கறி, நண்டு, சமைப்பதைப் பார்த்தவர் களும் சமைக்கப்பட்ட கறி உணவைப் புகழ்ந்தவர்களும் அதனைச் சாப் பிட்டவர்களும் என்று தீர்க்கதமா என்னும் ரிஷி கூறுகிறார். குளிர்க் காலத்திலும் கோடைக் காலத்திலும் குளிர்ப்பிரதேசத்தில் அவர்கள் பெரும் பாலும் கறி சாப்பிட வேண்டியவர் களாக இருந்தனர்.
-விடுதலை ஞா.ம.23.5.15

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ரிக்வேதத்தில் கங்கை நதியைப் பற்றிய ஒரு சிறு தகவலும் இல்லை

ரிக்வேதம் முதல் நவீன யுகம் வரை என்ற கலாச்சாரக் கண்காட்சி இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சிக்காக சமஸ்கிருத நூலாய்வுக் கழகமான லலித் கலா அகாடமி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
வாஸ்து, ஜோதிடம், ஆயுர் வேதம் மற்றும் அக்கால வாழ்க்கை முறைகள், கலாச்சாரங்கள் குறித்து கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், கங்கையைப் பற்றியதுதான். வேத அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டி ருப்பதாவது:
ரிக்வேதத்தில் ஒன்பது கண்டங்கள் மற்றும் பல்வேறு வேத நூல் குறிப்புகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆய்வு செய்தோம்; எங்கள் ஆய்வில் சிறிய அளவில்கூடத் தவறு நேர்ந்திட வாய்ப்பில்லை. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் அமைப்பு களையும் ஆய்வு செய்தோம். ஆனால், எந்த இடத்திலும் கங்கை நதியைப் பற்றிய ஒரு சிறு தகவலும், குறிப்பும்கூட இல்லை; இது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லலித் கலா அகாடமியின் ஆய்வுகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலை நாடுகளில் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் மற்றும் நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கட்டுரைகள் என்றும், எந்த ஒரு நிகழ்வையும் அறிவியல் தளத்தில் இருந்தும் இதை நாம் பார்க்க வேண்டும் என்றும் இயக்குநர் சரோஜ்பாலா குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வு இந்துத்துவாவாதிகளை ஒரு கலக்குக் கலக்கும் என்பதில் அய்யமில்லை. இதனை வேறு யாராவது கூறியிருந்தால், அதற்கு உள்நோக்கம் கற்பித்து விடுவார்கள். சொல்லுவதோ சமஸ்கிருத நூலாய்வுக் கழகமாகும்.
கங்கை என்றால் சாதாரணமா? சிவன் தலையில் (?) குடியிருக்கும் கங்காதேவியாயிற்றே - பாவங்களைப் போக்கும் தெய்வ சக்தி கொண்டது என்று நம்புபவர் களாயிற்றே! கங்கையைச் சுத்திகரிப்பதற்காக மத்திய பிஜேபி அரசு கொட்டியழப் போகும் தொகை ரூ.7000 கோடி.
புராணங்களை வரலாறாக மாற்ற நினைக்கும் புளுகுகளை பிஜேபி வட்டாரத்தையே சேர்ந்த ஆய்வுப் புலமே அம்பலப்படுத்தி விட்டது.
இரண்டாவதாக அதே சமஸ்கிருத நூலாய்வு கழகமான லலித் கலா அகாடமி சொல்லும் கருத்தும் கருத்தூன்றத் தக்கதாகும்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் ஆரியர்கள், 3000 ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்து திரிந்தனர். சிறிது சிறிதாக இந்தியத் தீபகற்பத்துக்குள் நுழைந்தனர்.
அந்தக் கால கட்டத்தில் இந்தியத் தீபகற்கம் முழுவதும் வாழ்ந்திருந்தவர்கள் திராவிடர்கள்;  ஆரி யர்களின் வருகையால் திராவிடர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு விரட்டப்பட்டனர் என்றும் கூறப் பட்டுள்ளது.
ஆரியராவது, திராவிடராவது - இவை எல்லாம் வெள்ளைக்காரன் கட்டி விட்ட கதை, அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று பிதற்றும் ஆர்.எஸ்.எஸ். கம்பெனிகளுக்கு - அவர்கள் வட்டாரத்திலிருந்தே பதிலடி கிடைத்து விட்டதா இல்லையா?
ஆரியர்கள் இந்தியத் தீபகற்பத்தில் நுழைந்த காலந்தொட்டே ஆரியர் - திராவிடர்  போராட்டம் சண்டை என்பது தொடங்கப்பட்டு விட்டது.
அந்தச் சண்டைகளைத் தான் வேதங்கள் வேறு வார்த்தைகளில் கூறுகின்றன.
திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன.
(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜீம்தார் எழுதிய பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்) ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை தங்களுடைய புத்தகங்களில் திராவி டர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
ஆரியக்கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதி னார்கள்!
(சி.எஸ்.சினிவாசாச்சாரி எம்.எஸ். ராமசாமி அய் யங்கார் ஆகியோர் எழுதிய இந்திய சரித்திரம் முதல் பாகம்)
இந்த ஆதாரங்களை நாம் எடுத்துச் சொன்னபோது ஆரியர் - திராவிடர் கட்டுக் கதை என்று கதைத்தவர்கள் - இப்பொழுது அவர்கள் வட்டாரத்து ஆய்வே ஆரியத் திராவிடர் பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரைகளாக வெளியிட்டுள்ளார்களே - முகங்களை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களாம்?
இன்றுகூட பார்ப்பனர்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகள் மூலம் தங்களை வேறுபடுத்தித்தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்;  ஆனால் அதனை ஒப்புக் கொண்டால், அவர்கள் வேறு இனத்தவர் என்ற உண்மை அம்பலப்பட்டு விடுமே - அது அவர்களுக்கு கேடாக முடியுமே- அந்தத் தந்திரத்தால்தான் இப்படி உள்ளொன்றும் புறமொன்றுமாக நடந்து கொண்டிருக் கிறார்கள் அல்லது நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
உண்மையை எவ்வளவுக் காலம்தான் திரை போட்டு மறைக்க முடியும்?
-விடுதலை,25.9.15