சனி, 17 அக்டோபர், 2015

பசுக்கறியை மண்டி சாப்பிட்ட பார்ப்பனர்கள்



இந்த மறைநான்கில் இவர்களின் பலியிடும் நிலை வளர்ந்த நிலையைக் காண்போம். வடதுருவப்பிரதேசத்தில் திரிந்தபோது குளிர்ப்பிரதேசத்தில் குளிர்காலத்தில் குளிர் தாங்க முடியாமல் இருந்தபோது குகைகளில் நுழைந்து தீ உருவாக்கி தீ காய்ந்தனர். அப்பொழுது அவர்களுக்கு உணவாகக் கிடைக்கக் கூடியது. காட்டுப்பசு, காட்டுக்குழிமுயல்கள், காட்டுப் பன்றிகள் மட்டுமே.
அங்குத் தானி யங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால், பசு, குழி முயல்களையும் பன்றிகளையும் குளிர் காலத்தில் மூட்டிடும் தீயில் காய்ந்த போது அதில் அவற்றை வாட்டி கொன்று உண்டனர். அப்போது அவர்கள் பசுவின் பாலும் பசுவின் கறியும் மற்றைய எல்லா உணவு களைவிட மிகுந்த சுவையானது என்று கருதினர். இதனைப் பிற்காலத்தில் எழுத்துரு பெற்ற அதர்வண மறை குறிப்பிடுகிறது.
அவர்கள் உலோகம் கிடைக்காமல் நாடோடிகளாக இருந்த நிலையில் அல்லது கற்கத்தி முதலிய கருவி கிடைக்காத போது அவற்றை மரக்கட் டையால் அடித்து கொன்று தின்றனர். பல குடும்பங்களாக இருந்தபோது அவற்றைப் பிரித்துக் கொண்டனர்.
சமித்ரசாலா
வளர்க்கப்பட்ட பசுவைக் கொலை செய்யும் இடத்தின் பெயர் சமித்ரசாலா ஆகும். அங்குப் பசுவை அழைத்துக் கொண்டு போய், வடக்குத் திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து சமிதா என்னும் பசுவைக் கொல்லும் புரோகிதர் முட்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வார். இரும்பு கண்டுபிடிக்காத காலத்தில் ஆரியர்கள் பசுவைக் கொன்று வந்தனர்.
கூரிய கத்தி இல்லாமல் இருந்ததால் தீயில் வாட்டிய பசுவைக் கையால் பிரித்துக் கொண்டனர் என்பதை உணர்த்துவதாக ஆரியர்கள் பசுவை பிரித்த முறை இருக்கிறது.
கறி துண்டாடுதல்
மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும்.
பின்கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும்.
முன்கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும்.
தோளிலிருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு இருபத்தாறு துண்டு களாக அறுத்தெடுக்க வேண்டும்.
பங்குபோட்ட பொழுது தங்கள் உணவினைத் தீயில் வாட்டி உண்ட தால் அதனை வணங்கினர். விறகிலி ருந்தோ கல்லில் இருந்தோ தீயாகமூட் டும்போதம் தீயை வளர்க்கும் போதும் அதனை ஆசையாக வணங்கினர். அதனைத் தாங்கள் உண்ணும்,  பசு, பன்றி, முயல், கறியை உண்ணவும் வேண்டினர். இவற்றின் கறியைத் தாங்கள் வளர்க்கும் தீ சாப்பிட்டதாகத் தவறாகக் கூறவும் செய்தனர்.
நாடோடியாக மலைப்பகுதியில் வாழ்ந்த காலத்தில் ஆரியர்கள், தங்கள் உணவைத் தீயில் வாட்டி உண்ட போதிலும் சுவைக்காக வேறு பொருளை அதனோடு சேர்த்து அவர்கள் உண்டதில்லை.
ஆரியர்கள் சூடான கறி இரசத்தைப் பருகி வந்தனர். இந்த இரசம் இந்திய அய்ரோப்பிய ஆரியர்கள் ஓரிடத்தில் இருந்தபோது அவர்களின் முக்கிய குடிரசமாக விளங்கி வந்தது. அந்தக் கறி இரசத்திலிருந்து நெய் தனியாகப் பிரித்து எடுக்கவும் கற்றனர். அந்த நெய்யை வைத்திருந்து உண்பதால் உடல்நலமாக இருப்பதை அறிந்து வந்தனர். மிகுதியாகச் சேமிக்கப்பட்டு இருந்ததால் அவற்றை உணவில் சேர்த்து உண்ணும் நிலை உருவானது.
பசுவின் நெய் உபரியாகக் கிடைத்த போது அதனை மட்டும் மறுசுழற்சி யாக உணவினில் சேர்த்து உண்டனர். நெய்யிலே வறுத்தல், பொரித்தலைத் தவிர வேறெந்த சுவைகலவையும் ரிக் மறைக்கால ஆரியர்கள் உபயோகப் படுத்தவில்லை. இதனை நான்கு மறை உணவு பழக்க வழக்கங்கள் வெளிப் படுத்துகின்றன.
பலியும், சமுதாயமும்
ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆண் ஆகிய தந்தையே பலியைக் கொடுக்கும் நிலையில் பெண் ஆகிய தாய் நூல் நூற்பவளாக இருந்தனர். அவ்வாறு ஆண்கள் உணவிற்கு ஆட்டையும் மாட்டையும் வேட்டையாடச் சென்று நாள் முழுவதும் காலத்தைச் செலவழித்ததால் வீட்டில் இருந்த ஆரிய பெண்கள் ஆட்டு ரோமத்தைச் சீர் செய்து அதனைக் கொண்டு ஆடைகள் தயாரித்தார்கள்.
கறி உணவ தீயில் வாட்டி உண்ணப்பட்ட நிலை மாறி, வறுத்தல் பொறித்தல் நிலை வந்தபோதிலும் அவை அதிக நாட்களுக்குக் கெடாமல் இல்லாததால் அவை வீணாகின. அதனால் பல விலங்குகளை அவர்கள் வேட்டையாடி வாழ்ந்த நிலை மாறி வளர்க்கப்பட்ட விலங்குகள் அதிகமாக இருக்கும் போது அவற்றை உண்ணும் போது மற்றைய ஆரியர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் கொண்டவர் களாக மாறினர்.
இதனைக் குதிரைக் கறி, நண்டு, சமைப்பதைப் பார்த்தவர் களும் சமைக்கப்பட்ட கறி உணவைப் புகழ்ந்தவர்களும் அதனைச் சாப் பிட்டவர்களும் என்று தீர்க்கதமா என்னும் ரிஷி கூறுகிறார். குளிர்க் காலத்திலும் கோடைக் காலத்திலும் குளிர்ப்பிரதேசத்தில் அவர்கள் பெரும் பாலும் கறி சாப்பிட வேண்டியவர் களாக இருந்தனர்.
-விடுதலை ஞா.ம.23.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக