சனி, 25 நவம்பர், 2023

கடவுளைக் கும்பிடுவதிலும் வேறுபாடு



உத்தரகீதை


"அக்நிரதேலோத் விஜாதீநாம்


முநிநாம் ஹிருதிதைவதம்


பர்மாஸ்வ பா புத்தா நாம்


ஸர்வத்ர மைதர்சிந"


துவிஜர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனர்களுக்குத் தெய்வம் அக்னியில், முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில். சம் பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம்.


ஸ்கந்தபுராணம் - ஞானயோக காண்டம் - நாடி சத்திராத்தியம்


"தீரத்தே தாதையக்ஞே


காஷ்டே பாஷாணகேபதா


சிவம் பஸ்யதி


மூடாத்மாசி லோதே ஹெபர் திஷ்டித"


மூடாத்மாக்கள் தீர்த்தத்திலும், தானத் திலும், தபசிலும், பக்ஞத்திலும், கட்டையிலும், கல்விலும் சிவம் இருப்பதாக நினைக்கிறார்கள். சிவமோ தமக்குள்ளேயே இருக்கிறார்.


சாக தபவ சன சுலோகா


"அபஸுதேலாப நீஷநாம்


காஷ்டலோஷ்ட்டேஷீ மூடாவாம்-


யுக்தஸ் யாத்மநி தேவதா"


சாதாரண மனிதர்களுக்குத் தெய்வம் நீரில்; சற்றுத் தெளிந்தவர்களுக்குத் தெய்வம் ஆகாசத்தில்; முட்டாள்களுக்குத் தெய்வம் கல்லிலும், கட்டையிலும்; யோகிகளுக்குத் தெய்வம் அவர்களுக்குள்ளே.


மகாநிர்வாணா


"எவம்குணா நுஸாரேண ரூபாணி


விவிதாநி சகல் பிதாநி


ஹிதார்த்தாய பக்தாநி


அல்பமே தஸாம்"


இவ்வித குணங்களை யனுசரித்துப் பலவித உருவங்கள் அற்ப புத்தியுடையவர்களுக்காகக் கற்பிக்கப்பட்டன.


வால்மீகர் சூத்திரஞானம்


"தாளென்ற உலகத்தில் சிறிதுபேர்கள்


சடைப்புலித்தோல் காஷாயம் தாவடம் பூண்டு


ஊளென்ற சிவபூசை தீட்சையென்பார்


திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார் கானென்ற காட்டுக்குள்ளே அலைவார் கோடி


காரணத்தை யறியாமல் கதறுவாரே நில்லென்ற பெரியோர்கள் பாஷையாலே


நீடுலகம் தனக்குள் நாலுவேதம்


வல்லமையாம் சாஸ்திரங்கள் இரு மூன்றாக


வயிறு பிழைக்கப் புராணங்கள் பதினெட் டாகக் கல்லுகளைக் கரைப்பது போல் வேதாந் தங்கள் காட்டினர் அவரவர் பாஷையாலே தொல்லுலகில் நாற் சாதி


அநேகஞ்சாதி தொகுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத்தானே".


- உண்மை இதழ், 16-30.9.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக