புதன், 2 ஆகஸ்ட், 2023

ஶ்ரீ கௌதம மஹரிஷி அருளிய தர்ம ஸூத்ரம்

ஶ்ரீ கௌதம மஹரிஷி அருளிய தர்ம ஸூத்ரம்

மனுதர்மத்தை விஞ்சிய தர்ம ஸூத்ரம் இது. படித்து மகிழ்க!

கன்னியை, பிதா முதலியவர்கள் உரிய காலத்தில் வரனுக்கு தானம் செய்யாவிட்டால், அப்போது அந்தக் குமாரி மூன்று ருது காலம் வரையில் பொறுத்துவிட்டு அநிந்திதனான, அதாவது சாஸ்திர விகிதனான வரனை அடையலாம். ஆகையால் பெண் பருவமடையும் முன்னரே கன்யா ப்ரதானம் செய்துவிட வேண்டும்.

அந்தப்படி, பருவமடையும் முன் வரனிடம் பெண்ணைக் கொடுக்காதவன் தோஷமுள்ளவன் ஆகிறான்.

பெண் வெட்கத்தை அறிந்து ஆடை அணிந்து கொள்ளும் முன்பே கன்னியாதானம் செய்துவிட வேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். 

மூன்றாவது ப்ரஸ்னம் மூன்றாவது அத்தியாயம்

பிராமணனின் தோஷத்தை எவன் முதன்முதலில் வெளியே சொல்கிறானோ அவனுக்கும் அதேயளவு தோஷம் உண்டாகும்.

பிராமணனை அடிக்க முயற்சி செய்தால் நூறு வருஷம் பரலோக நன்மை கிடையாது.

பிராமணனை அடித்தால்1000 வருசம் பரலோக நன்மை கிடையாது.  
ப்ராமணனை அடித்த பிரம்மஹத்தி ஏற்பட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?

அக்கினியில் மும்முறை விழுந்து விழுந்து எழ வேண்டும்.
பிழைத்தாலும் இறந்தாலும் சுத்தியடைவீர்கள்.

அல்லது

யுத்த உடை தரித்தவனின் ஆயுதத்திற்கு இலக்காக நிற்க வேண்டும். பிழைத்தால் சுத்தியடைவீர்கள்.

வேற என்னென்ன செய்யலாம்?
பகலில் நிற்பது, இரவில் உட்காருவது, மூன்று வேளையும் ஸ்நானம் செய்வதென தொடர்ந்து 12 வருஷம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

ஆபத்திலிருந்து ஒரு பிராமணனைக் காப்பாற்றினால் சுத்தியடையலாம்.

பிராமணனது பொருளைத் திருடிக் கொண்டு ஓடுபவனிடம் சண்டையிட்டு பொருளை மீட்டுக் கொடுப்பதால்! 
பசுவைக் கொன்றால் வைஷ்யவத விரதமிருந்து சுத்தியடையலாம்!

அதென்ன வைஷ்யவத விரதம்?

101 பசுக்களை பிராமணனுக்குத் தானம் செய்வதே வைஷ்யவத விரதம்!

தவளை, கீரி, காகம், ஓணான், மூஞ்சூறு, நாய் என எதைக் கொன்றாலும் வைஷ்யவத விரம் மேற்கொள்க! 

பன்றியை  வதம் செய்தால் ஒரு குடம் நிறைந்த நெய் தானம் செய்க!

பாம்பை வதம் செய்தால் இரும்பு உலோக தண்டம் தானம் செய்க!

விபச்சாரி ஸ்தீரியைக் கொன்றால் கருப்புக் காளைமாடு தானம்- பிராயச்சித்தம்.

அந்த ப்ராமண ஸ்தீரி விபச்சார தொழிலால் ஜீவித்திருப்பவளாய் இருந்தால் எட்டு முஷ்டி தான்யம் தானம்.  கீழ்த்தர ஜாதியானுடன் ஓடிப்போன ஸ்தீரியை அரசன் முன்னிலையில் நாய்களைக் கொண்டு கடிக்கச் செய்ய வேண்டும்.

அந்த ஈன வர்ண புருஷனை அரசன் வதம் செய்து தண்டிக்க வேண்டும். ஆரியர்களல்லாதவர்களுடன் விரதக் காலத்தில் சம்பாஷணம் செய்யக் கூடாது.

சம்பாஷணை~ வாத, விவாதம்.
- - திராவிடச் செல்வன் முகநூல் பதிவு,02.08.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக