கைவல்யம் - வேதாந்தம்

வேதம் குறித்த உண்மை விளக்கம்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? (1,2,3)



    August 27, 2021 • Viduthalai

  10.03.1935 -குடிஅரசிலிருந்து..

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனாக வும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும். - அ. 8. சு. 113-115.

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? (2)
September 03, 2021 • Viduthalai

10.03.1935 -குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப் பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? (3)
September 10, 2021 • Viduthalai

10.03.1935 -குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி

20.  பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.  சூத்திரனுக்கு பிராமணப்பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

22.  சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11.  சு.13.

23.  யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11  சு.20.

24. பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11  சு.66.

25.  ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.

- அ.11.  சு.131.

25  (அ) அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது - அ.11.  சு.132.

26. சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி

ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11  சு.285.

27.  சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.

28. பிராமணரல்லாதவன் உயர்குலத் தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10  சு.96

29. சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும். - அ.10. சு.96.

30. பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப்போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125

31.  சூத்திரன் எவ்வளவு திறமை யுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராம ணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10.  சு.129.

32.  மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங் களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2.  சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறுவதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:18 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: மனுதர்மம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

கைவல்ய சாமியார்

கைவல்ய சாமியார்

வேதம்

வேதம்
Powered By Blogger

சிறப்புடைய இடுகை

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார் விமர்சிக்கவில்லையா!

 கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து  என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம...

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

  • -மனுதர்மம்
  • :துக்ளக்
  • அண்ணல் அம்பேத்கர்
  • அய்யப்பன்
  • அரக்கர்
  • அறிக்கை
  • அறிவுக்கரசு
  • ஆசிரியர் பதில்
  • ஆட்சி
  • ஆண்
  • ஆபாசம்
  • ஆய்வு-1
  • ஆய்வு-2
  • ஆய்வு-3
  • ஆய்வு-4
  • ஆரிய வேதம்
  • ஆரியம்
  • ஆரியர் வருகை
  • ஆரியர்களின் தீ
  • இந்து தர்மம்
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இந்துமதம்
  • இரு பிறப்பு
  • இருக்கு வேதம்
  • இலக்கியம்
  • இஸ்லாம்
  • உஞ்சவிருத்தி
  • உத்தர கீதை
  • உபநயனம்
  • எரிப்பு
  • ஏவாள்
  • ஒழுக்கக்கேடு
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • கடவுள்
  • கதை
  • கந்தன்
  • கல்வி
  • கலாச்சாரம்
  • கலைஞர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • காந்தி
  • காயத்ரிமந்திரம்
  • கி.வீரமணி
  • கிரகபிரவேசம்
  • கிருத்துவம்
  • கிருஷ்ணன்
  • கீதை
  • குங்குமம்
  • குணம்
  • கும்பிடுதல்
  • குரான்
  • குருமூர்த்தி
  • குழந்தை திருமணம்
  • கைவல்யம்
  • கோத்திரம்
  • கோரக்ஷணை
  • கௌதம மஹரிஷி
  • சங்க இலக்கியம்
  • சங்கரர்
  • சங்கராச்சாரி
  • சடங்குகள்
  • சண்டாளர்
  • சவரம்
  • சனாதன தர்மம்
  • சனாதனம்
  • சாமி கைவல்யம்
  • சாமியார்
  • சிரார்த்தம்
  • சிருங்கேரி சங்கராச்சாரியார்
  • சிலை
  • சீர்திருத்தம்
  • சுக்ல யஜுர்
  • சூத்திரன்
  • சோழர்காலம்
  • தமிழ் வேதம்
  • தமிழ்க் கடவுள்
  • தர்ம சூத்திரம்
  • தலையங்கம்
  • தஸ்லிமா
  • தாத்தாச்சாரியார்
  • தாலி
  • தானம்
  • திதி-தர்ப்பணம்
  • திராவிடர்
  • திராவிடர்களின் தீபம்
  • திருமண மந்திரம்
  • திருமணம்
  • திருவிளையாடல்
  • திவசம்
  • தினமணி
  • தினமலர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • துக்ளக்
  • துவேஷி
  • தேவர்
  • தொழில்
  • ந.சி.கந்தையாபிள்ளை
  • நவராத்திரி
  • நாத்திகவாதம்
  • நாராயணன்
  • பக்தர்கள்
  • பக்தி
  • பகவத் கீதை
  • பகவத்கீதை
  • பசு
  • பசு இறைச்சி
  • பசுவதை
  • பஞ்சமர்
  • படிப்பு
  • படைப்பு
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிலடிப் பக்கம்
  • பதிலடிப் பக்கம்:
  • பரம்பொருள்
  • பலி
  • பாக்கள்
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பிச்சை
  • பிரம்ம முகூர்த்தம்
  • பிரம்மா
  • பிராமண தர்மம்
  • பிராமணர்
  • பிராமணன்
  • பிறப்பு
  • புத்தம்
  • புராணம்
  • புனிதம்
  • பூணூல்
  • பெண்
  • பெண்கள்
  • பெரியபுராணம்
  • பெரியார்
  • பெரியார் படம்
  • பேதங்கள்
  • பேதம்
  • பைபிள்
  • பொய் பிரச்சாரம்
  • பொருள்
  • பொள்ளாச்சி
  • பௌத்தம்
  • மதக்குறி
  • மதம்
  • மந்திரங்கள்
  • மந்திரம்
  • மயிலாடன்
  • மனு நீதி
  • மனுசாஸ்திரம்
  • மனுதர்மம்
  • மனுதரும சாஸ்திரம்
  • மனுஸ்மிருதி
  • மாட்டிறைச்சி
  • மாட்டுக்கறி
  • மாதவிடாய்
  • மாமிசம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீமாம்சம்
  • மொட்டை
  • மொழி
  • யாகம்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராமானுஜர் தாத்தாச்சாரியார்
  • ரிக் வேதம்
  • ரிக்வேதம்
  • ரிஷி
  • வர்ண தர்மம்
  • வர்ணம்
  • வர்ணாசிரம தர்மம்
  • வர்ணாசிரமம்
  • வருணம்
  • வருணாசிரமம்
  • வள்ளலார்
  • விபச்சாரி மகன்
  • விவேகானந்தர்
  • விஜயபாரதம்
  • வேத பண்பாடு
  • வேதங்கள்
  • வேதங்கள் - பேதங்கள்
  • வேதம்
  • வேதம் பசுவதை
  • வேறுபாடு
  • வைணவம்
  • வைரமுத்து
  • ஜகத்குரு
  • ஜாதி
  • ஸ்டாலின்
  • ஸ்மிருதிகள்
  • ஸநாதனதர்மம்

பிரபலமான இடுகைகள்

  • தாய்க்கு திவசம் செய்ய புரோகிதன் சொல்லும் மந்திரம்
    தாய்க்கு திவசம் செய்யப்போகிறான் ஒரு பாமரன். அப்போது புரோகிதன் சொல்லும் மந்திரம் என்னவென்றால், என்மே மாதா ப்ரவது லோபசரதி அன்னவ் வ்ர...
  • நகரத்தார்களும், வாணிய செட்டியார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது தெரியுமா?
    மனுதர்மம்பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட அரிய தகவல் சென்னை, நவ.14- நகரத்தார்களும், வாணிய செட்டி யார்களும்...
  • பிராமண போஜனமும் சட்டிச் சோறும்        
    நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்         (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்) ஆசிரியர்: ஆ.சிவசு...
  • யார் அந்த சண்டாளர்கள்?
    சண்டாளர்கள் தாழ்த்தப்பட்டவர்களா? என்று கேட்போருக்கு... யார் அந்த சண்டாளர்கள்? துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் ...
  • சூத்திரனுக்குக் கல்வி கொடாதே! - மனு
    கட்டுமா கீழ் ஜாதிக்காரர்கட்கு அறிவைப் புகட்டக் கூடாது. அப்படி ஓர் ஆசிரியன் சூத்திரனுக்கு கல்வி புகட்ட முயற்சித்தால் அவன் கடும் தண்டனைக்கு உள...
  • மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் - பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.
    முன்னுரை:- நல்லாட்சி நடத்திய மவுரியப் பேரரசர் அசோகரின் அருமை பெருமைகளை உலகுக்குப் பறை சாற்றும் வண்ணம் இந்தியத் தேசியக் கொடியில் அசோகச்...
  • பார்ப்பானும் மாட்டுக்கறியும்!
    *"பார்ப்பானும்  மாட்டுக்கறியும்"* ⚫ ஆரிய பிராமணன் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள், கோடரி பயன்படுத்தினார்கள்...
  • திருமண வைபங்களில் ஆபாச வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
    வைதீக திருமண வைபங்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் மிக மிக கொச்சையான ஆபாசமான மந்திரங்களும் அந்தச் சடங்குகளின் போது ஓதப் படுவது வைத...
  • குழந்தை பெற்றுக்கொள்வதற்காக புணர உறவுமுறை தேலையில்லை!
    1927இல் பாலக்கோட்டில், காம கோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காந்தியாரிடம், இந்து அரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்...
  • ஆபாச திருமண மந்திரங்கள்
    #திருமணம் 'சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ'''' இந்த மந்திரம் மணமகளை நோக்...

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (27)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (29)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2022 (7)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மார்ச் (1)
    • ▼  பிப்ரவரி (1)
      • இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படி...
  • ►  2021 (21)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (25)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (53)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (6)
  • ►  2018 (45)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (19)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2016 (23)
    • ►  நவம்பர் (7)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (22)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (2)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.