புதன், 3 ஜனவரி, 2018

தந்தை பெரியாரின் தத்துவம் பரவுகிறது! தெலங்கானா மாநிலத்தில் மனுதர்மம் எரிப்பு!

அய்தராபாத், டிச.28 தெலங்கானா மாநிலத்தில் சத்தவாகனா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.



1927ஆம் ஆண்டுடிசம்பர் 25 அன்று பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்திக்காட்டினார். அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்று, தாழ்த்தப் பட்டவகுப்பினரின்உரிமைகளுக்காகபோராடி வருபவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களிலும் அந்த நாளை மனுதர்ம நூல் எரிப்பு நாளாக (மனுஸ்மிரிதி தகன் திவாஸ்) கடைப் பிடித்து வருகிறார்கள்.

அதன்படி, 25.12.2017 அன்று தெலங்கானா மாநிலத்தில் மனு தர்ம நூல் எரிப்பு நாளை கொண்டாடும் வண்ணம் சத்தவாகனா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.

மாணவர் அமைப்புகள்

முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங் கம், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சங்கம்,தெலங்கானாவித்யார்த்திவேதிகேமற்றும் பகுஜன் மாணவர்கள் சங்கம் ஆகிய மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றி ணைந்து மனுதர்ம நூலைத் தீக்கிரையாக்கினார்கள்.

அப்போது, பாஜகவைச் சேர்ந்த வன்முறை யாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டு, மாணவர்களை தடிகளால் தாக்கினார்கள்.

ஜூபாக்கா சிறீனிவாஸ்

முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கத் தைச் சேர்ந்த மாணவர் ஜூபக்கா சிறீனிவாஸ் கூறியதாவது:

வழக்கம்போல் ஜாதி வெறி நூலான மனு தர்மத்தைக் கொளுத்திட திட்டமிட்டிருந்தோம். டிசம்பர் 25 ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு அத்தாக்குதல் நிகழ்ந்தது. அவர்கள் யாரென்றே எங்களுக்கு தெரியாது. நாங்கள் மனு தர்ம நூலை எரிப்பதற்காகக் கூடி தயாராக இருந்தோம். அவர்கள் திடீரென பல்கலைக்கழக வளாகத்துக்குக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். அவர்கள் முற்றிலும் தாக்குதலை நடத்திட திட்டமிட்டு தயாராக வந்தி ருந்தார்கள். கற்களாலும், தடிகளாலும் எங்களை தாக்கத் தொடங்கினார்கள்.

இதற்கு முன்னரும் நாங்கள் இதுபோல் மனுதர்ம நூலை எரித்துள்ளோம். பாஜக மாண வர் அமைப்பாகிய ஏபிவிபியினர் எதிர்ப்பு தெரிவித்ததே கிடையாது. இப்போதுதான் பல் கலைக்கழக வாளாகத்தினுள்ளேயே எங்களைத் முதல் முறையாக தாக்கியுள்ளார்கள்.

பாஜக கும்பலின் வன்முறைகளைக் கட்டுப் படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள்.

மாணவர்கள் மற்றும் பாஜக என இருதரப் பிலும் 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைபேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிப் பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்துவருகிறார்கள்.

மனுதர்ம நூல் எரிப்பு நாளையொட்டி முழக்கங்கள் எழுப்பிய மாணவர்களை தேச விரோத முழக்கங்கள் முழங்கியதாக பாஜகவினர் பழி சுமத்தினர்.

இதுகுறித்து பாஜக தொடர்பாளர் பண்டி சஞ்சய் கூறியதாவது:

“மனுஸ்மிரிதி தகன் திவாஸ் என்று மாண வர்கள்செய்யவில்லை.பாரதமாதாவுக்குஎதி ராகவும்,இந்துமதத்துக்குஎதிராகவும்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் மாண வர்கள் முழக்கமிட்டதாலேயே  கட்சியினர் தலையிட்டார்கள். பாரத மாதாவுக்கு எதிராக முழக்கமிட்டு, பாரத மாதா படத்தை கிழித்தார் கள்.உள்ளூர்வாசிகள்தாழ்த்தப்பட்டவர்உள்பட இருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவர் களாலேயே தாக்கப்பட்டார்கள். அதனாலேயே, கட்சியினர் தலையிட்டார்கள். முதலில் மாண வர்கள்தான் தாக்கினார்கள்’’ என்று கதைத்தார்.

காவல்துறை துணை ஆணையர்

வாஜ்பேயி பிறந்த நாளைக் கொண்டாடிய மாணவர்களும்சேர்ந்துதாக்கியதாகவும், தாழ்த் தப்பட்டவகுப்பு பகுஜன் மாணவர்கள்மனு தர்ம நூலை எரிக்கத் தொடங்கியபோது நாங் கள் அந்த இடத்துக்கு சென்று விட்டோம். இரு தரப்பினரிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு கல்வீச்சு நடைபெற்றதாகவும்  கரீம்நகர் கூடுதல் காவல்துறை துணை ஆணையர் சஞ்சீவ்குமார் கூறினார்.

மனுதர்மம் எரிக்கப்பட்டது

தமிழகம்மட்டுமல்லாமல்,ஆந்திரா,தெலங் கானா, கருநாடகா, மகாராட்டிரா, கேரளா உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும்,  சிங்கப்பூர், ஆப்பிரிக்கா, அரபு நாடுகள், அமெரிக்க அய்க்கிய நாடுகள் உள்பட பன்னாட்டளவிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் மற்றும் நினைவு நாள் நிகழ்வுகள் மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி, மத எதிர்ப்பு, பகுத்தறிவு நெறிபரப்பும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா மாநிலத்தில் மாஞ்செரியல் மாவட்டத்தில் பெல்லம்பள்ளியில் தந்தை பெரியார் 44ஆம் ஆண்டு நினைவு நாளில் (24.12.2017) மனுஸ்மிருதி  (மனுதர்ம சாஸ்திரம்) தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

பெரியாரிய சிந்தனையாளர்கள் ஒருங்கி ணைந்து நடத்திய இந்நிகழ்வில் பெரியாரிய சிந்தனையாளர்கள், நாத்திகர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ஜி.சிறீஅரி, எல்.ராஜண்ணா, ஏ.கிருஷ்ணா, ஏ.உமா, ஏ.தேஜா, ஜி.சிறீநாத், ஆர்.சிறீனிவாஸ், கே.மல்லேஷ், எஸ்.ராஜன்அரசு, ஏ.சிறீனிவாஸ்,பி.அசோக்,ஜி.சுவாமி,ஆர். பிரசாந்த் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 28.12.17

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக