திங்கள், 15 ஜனவரி, 2018

சொர்க்கத்திற்கு போக இதோ சுலபமான வழி.

இந்துக்களே, ரிக்வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடந்தால் போதும் சுலபமாக சொர்க்கத்திற்கு போய் விடலாம்.

ரிக்வேதம் தாத்தாக்கிரி மெய் சகத்தில் குறிப்பிட்டுள்ளபடி செய்யுங்கள். நீங்கள் உடனே மோட்சத்திற்கு போய் விடலாம். இதோ அந்த சுலோகம்.

வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும். நாசமாகிவிடும். கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

எவ்வாறு சொர்க்கத்துக்கு போவது என்று அங்கலாய்க்கும் முட்டாள்களே, ரிக் வேதத்தில் சொல்லியபடி உடனே சிவப்பு விளக்கு பகுதிக்கு ஓடுங்கள் சொர்க்கத்தை அடையலாம். காலம் தாழ்த்தினால் இடம் கிடைக்காது. எல்லாம் புக் ஆகிவிடும். ஓடுங்கள் சிவப்பு விளக்குப் பகுதிக்கு.
-ஆறாம் அறிவு, முகமது நசீம் முகநூல் பதிவு, 15.1.18

புதன், 3 ஜனவரி, 2018

தந்தை பெரியாரின் தத்துவம் பரவுகிறது! தெலங்கானா மாநிலத்தில் மனுதர்மம் எரிப்பு!

அய்தராபாத், டிச.28 தெலங்கானா மாநிலத்தில் சத்தவாகனா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.



1927ஆம் ஆண்டுடிசம்பர் 25 அன்று பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்திக்காட்டினார். அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்று, தாழ்த்தப் பட்டவகுப்பினரின்உரிமைகளுக்காகபோராடி வருபவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களிலும் அந்த நாளை மனுதர்ம நூல் எரிப்பு நாளாக (மனுஸ்மிரிதி தகன் திவாஸ்) கடைப் பிடித்து வருகிறார்கள்.

அதன்படி, 25.12.2017 அன்று தெலங்கானா மாநிலத்தில் மனு தர்ம நூல் எரிப்பு நாளை கொண்டாடும் வண்ணம் சத்தவாகனா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.

மாணவர் அமைப்புகள்

முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங் கம், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சங்கம்,தெலங்கானாவித்யார்த்திவேதிகேமற்றும் பகுஜன் மாணவர்கள் சங்கம் ஆகிய மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றி ணைந்து மனுதர்ம நூலைத் தீக்கிரையாக்கினார்கள்.

அப்போது, பாஜகவைச் சேர்ந்த வன்முறை யாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டு, மாணவர்களை தடிகளால் தாக்கினார்கள்.

ஜூபாக்கா சிறீனிவாஸ்

முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கத் தைச் சேர்ந்த மாணவர் ஜூபக்கா சிறீனிவாஸ் கூறியதாவது:

வழக்கம்போல் ஜாதி வெறி நூலான மனு தர்மத்தைக் கொளுத்திட திட்டமிட்டிருந்தோம். டிசம்பர் 25 ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு அத்தாக்குதல் நிகழ்ந்தது. அவர்கள் யாரென்றே எங்களுக்கு தெரியாது. நாங்கள் மனு தர்ம நூலை எரிப்பதற்காகக் கூடி தயாராக இருந்தோம். அவர்கள் திடீரென பல்கலைக்கழக வளாகத்துக்குக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். அவர்கள் முற்றிலும் தாக்குதலை நடத்திட திட்டமிட்டு தயாராக வந்தி ருந்தார்கள். கற்களாலும், தடிகளாலும் எங்களை தாக்கத் தொடங்கினார்கள்.

இதற்கு முன்னரும் நாங்கள் இதுபோல் மனுதர்ம நூலை எரித்துள்ளோம். பாஜக மாண வர் அமைப்பாகிய ஏபிவிபியினர் எதிர்ப்பு தெரிவித்ததே கிடையாது. இப்போதுதான் பல் கலைக்கழக வாளாகத்தினுள்ளேயே எங்களைத் முதல் முறையாக தாக்கியுள்ளார்கள்.

பாஜக கும்பலின் வன்முறைகளைக் கட்டுப் படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள்.

மாணவர்கள் மற்றும் பாஜக என இருதரப் பிலும் 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைபேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிப் பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்துவருகிறார்கள்.

மனுதர்ம நூல் எரிப்பு நாளையொட்டி முழக்கங்கள் எழுப்பிய மாணவர்களை தேச விரோத முழக்கங்கள் முழங்கியதாக பாஜகவினர் பழி சுமத்தினர்.

இதுகுறித்து பாஜக தொடர்பாளர் பண்டி சஞ்சய் கூறியதாவது:

“மனுஸ்மிரிதி தகன் திவாஸ் என்று மாண வர்கள்செய்யவில்லை.பாரதமாதாவுக்குஎதி ராகவும்,இந்துமதத்துக்குஎதிராகவும்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் மாண வர்கள் முழக்கமிட்டதாலேயே  கட்சியினர் தலையிட்டார்கள். பாரத மாதாவுக்கு எதிராக முழக்கமிட்டு, பாரத மாதா படத்தை கிழித்தார் கள்.உள்ளூர்வாசிகள்தாழ்த்தப்பட்டவர்உள்பட இருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவர் களாலேயே தாக்கப்பட்டார்கள். அதனாலேயே, கட்சியினர் தலையிட்டார்கள். முதலில் மாண வர்கள்தான் தாக்கினார்கள்’’ என்று கதைத்தார்.

காவல்துறை துணை ஆணையர்

வாஜ்பேயி பிறந்த நாளைக் கொண்டாடிய மாணவர்களும்சேர்ந்துதாக்கியதாகவும், தாழ்த் தப்பட்டவகுப்பு பகுஜன் மாணவர்கள்மனு தர்ம நூலை எரிக்கத் தொடங்கியபோது நாங் கள் அந்த இடத்துக்கு சென்று விட்டோம். இரு தரப்பினரிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு கல்வீச்சு நடைபெற்றதாகவும்  கரீம்நகர் கூடுதல் காவல்துறை துணை ஆணையர் சஞ்சீவ்குமார் கூறினார்.

மனுதர்மம் எரிக்கப்பட்டது

தமிழகம்மட்டுமல்லாமல்,ஆந்திரா,தெலங் கானா, கருநாடகா, மகாராட்டிரா, கேரளா உள் ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும்,  சிங்கப்பூர், ஆப்பிரிக்கா, அரபு நாடுகள், அமெரிக்க அய்க்கிய நாடுகள் உள்பட பன்னாட்டளவிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் மற்றும் நினைவு நாள் நிகழ்வுகள் மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி, மத எதிர்ப்பு, பகுத்தறிவு நெறிபரப்பும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா மாநிலத்தில் மாஞ்செரியல் மாவட்டத்தில் பெல்லம்பள்ளியில் தந்தை பெரியார் 44ஆம் ஆண்டு நினைவு நாளில் (24.12.2017) மனுஸ்மிருதி  (மனுதர்ம சாஸ்திரம்) தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

பெரியாரிய சிந்தனையாளர்கள் ஒருங்கி ணைந்து நடத்திய இந்நிகழ்வில் பெரியாரிய சிந்தனையாளர்கள், நாத்திகர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ஜி.சிறீஅரி, எல்.ராஜண்ணா, ஏ.கிருஷ்ணா, ஏ.உமா, ஏ.தேஜா, ஜி.சிறீநாத், ஆர்.சிறீனிவாஸ், கே.மல்லேஷ், எஸ்.ராஜன்அரசு, ஏ.சிறீனிவாஸ்,பி.அசோக்,ஜி.சுவாமி,ஆர். பிரசாந்த் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- விடுதலை நாளேடு, 28.12.17

.


நாத்திகம் என்பது தவறான சொல் அல்ல!


நாத்திகம் என்ற சொல் ஒன்றும்தவறானதல்ல. கடவுள் மறுப்பாளர்களைநாத்திகர்கள் என்று சொல்லுவதுசரிதான். மதுரைத் தமிழ்ப் பேரகராதி கூடநாத்திகம் என்ற சொல்லுக்குதெய்வமின்மை நிரீஸ்வரம் என்றேபொருள் கூறுகிறது.

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்(பக்கம் 626) என்ன கூறுகிறது?

நாத்திகம் (Atheism): தெய்வம்அல்லது தெய்வ நம்பிக்கை போன்றபொருண்மை சாராதவற்றைத்திறனாய்தல். கடவுள் உள்ளாரா என்றுவினா எழுப்பி சடப்பொருட்களில் மட்டும்நம்பிக்கை கொள்ளும் உலகாயதம்போலல்லாமல் நாத்திகம் கடவுளைமுற்றிலும் மறுக்கிறது. பல தத்துவமுறைகளில் இது வேரூன்றியுள்ளது. பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளானடெமாகிரிட்டஸ், எபிக்யுரஸ் ஆகியோர்பொருண்மைத்துவம் குறித்துப்பேசுகையில் இதை ஆதரித்துவாதிட்டுள்ளார். 18ஆம் நூற்றாண்டில்டேவிட் ஹ்யூம், இம்மானுவல் கான்ட்ஆகியோர் நாத்திகவாதிகளல்லர்எனினும், கடவுள் இருப்பதற்கான மரபுவழிச்சான்றுகளுக்கு எதிராக வாதிட்டனர். கடவுட்பற்றே நம்பிக்கைக்குக் காரணம்என்றனர். லுட்விக் ஃபாயர்பாக் போன்றநாத்திகவாதிகள் கடவுள் என்பது மனிதலட்சியங்களின் உருவகப் புனைவுஎன்றும், இந்தப் புனைவை அடையாளம்காண்பது தன்னை உணர்தலைச்சாத்தியமாக்குகிறது என்றும் கூறினர். மார்க்ஸியம் நவீனபொருண்மைத்துவத்தின் வடிவமாகத்திகழ்கிறது. ஃபிரடெரிக் நீட்ஷேயிலிருந்துதொடங்கிய இருத்தலியல் நாத்திகம், கடவுளின் மரணத்தைப் பிரகடனப்படுத்தி, மதிப்பையும் பொருளையும்நிர்மாணிக்கும் மனித உரிமையைஅறிவித்தது. தர்க்க நேர்காட்சி வாதம்(லாஜிகல் பாசிடிவிஸம்) கடவுள்இருக்கிறாரா இல்லையா என்றபிரச்சினையே முட்டாள்தனமானதுஅல்லது பொருளற்றது என்று கூறுகிறது. இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்டசகாப்தத்தில் சார்வாகர் என்ற அறியப்பட்டரிஷியின் சார்வாகக் கொள்கையும்நாத்திகம் சார்ந்ததே. பவுத்த மதத்தின்ஸ்தாபகரான புத்தர் கடவுளை ஏற்கவோமறுக்கவோ இல்லை. எனவே பவுத்த மதம்எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைவழிபடுவதில்லை. தமிழகத்தில் நாத்திகவாதத்தை முன்னெடுத்துச்சென்றவர்களில் பெரியார் என்றுஅழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமிமுக்கியமானவர் என்கிறது பிரிட்டானிகாதகவல் களஞ்சியம்.

இன்னும் சொல்லப்போனால் இந்துமதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டுஎன்று பெருமையாக சொல்லிக்கொள்பவர்கள், நாத்திகத்தை ஏன்வெறுக்க வேண்டும். சாருவாகனம்என்பதெல்லாம் நாத்திக வாதம் தானே.

இந்து மதத்தில் ஒரு வினோதம்என்னவென்றால் கடவுளை மறுப்பவர்கள்நாத்திகர்கள் அல்லர், மாறாக வேதத்தைமறுப்பவர்தான் நாத்திகர்.

மனுதர்மம் 2ஆம் அத்தியாயம்11ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?

வேதம் (சுருதி), தரும சாஸ்திரம்(ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்கயுக்தியைக் கொண்டு மறுப்பவன்நாஸ்திகனாகின்றான். இத்தகையநாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால்தெய்வத்தை நிந்திக்கின்றவனாவான்.

நாத்திகத்துக்கு மனுதர்மம் கூறும்விளக்கம் இது:

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்னசொல்லுகிறார்?

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிதீச்வர வாதம்என்றுதானே இப்போது நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக்கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்கமுடியும்.

அப்படிப்பட்ட பலபேர்இருந்திருக்கிறார்கள். இது என்னவேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால்என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில்நம்பிக்கை இருப்பது என்பது அர்த்தம்.

வைதிக வழக்கைஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதேஞானசம்பந்தரின் கொள்கையாகவும்இருந்திருக்கிறது. ஈசுவர பக்திஇல்லாமலிருப்பதுங்கூட அல்ல  (தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408)

இப்பொழுது புரிகிறதா - நாத்திகம் - ஆத்திகம் என்பதற்கான விளக்கம்?

1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில்நடைபெற்ற சட்டப் பேரவைத்தேர்தலின்போது சேலத்தில் திராவிடர்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டமூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுஊர்வலத்தில் ஜனசங்கத்தினர் தந்தைபெரியார் மீது செருப்பினை வீச, அந்தசெருப்பினை இலாவகமாகப் பிடித்தகருஞ்சட்டைத் தோழர் மூடநம்பிக்கைஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டராமன் படத்தினை அந்தசெருப்பைக்கொண்டு அடிக்க - தேர்தல்நேரம் என்பதால் பார்ப்பனர்கள் குறிப்பாகதுக்ளக், தினமணி போன்ற ஏடுகள்அதைப் பெரிதுபடுத்தி, தேர்தல்பிரச்சாரமே இதனை மய்யப் புள்ளியாகக்கொண்டு சுழன்றது.

அப்பொழுது தவத்திரு குன்றக்குடிஅடிகளார் அவர்கள் திருக்குறள்போலஇரண்டு வரிகளில் தம் கருத்தைப் பதிவுசெய்தார்.

இன்று ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம். இன்று நாஸ்திகம்என்பது பெருவாரியான தமிழ் மக்களின்நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்?என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். (விடுதலை 19.2.1971)

இராமனை தி.க.வினர்செருப்பாலடித்து விட்டனர்; அப்படிப்பட்டதி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டுஎன்று எதிரிகள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவு என்ன தெரியுமா? இராமனை செருப்பாலடிப்பதற்கு முன்பு1967இல் தி.மு.க.வுக்கு கிடைத்த சட்டமன்றஉறுப்பினர்களின் எண்ணிக்கை 138, செருப்படிக்குப் பிறகு மிகப் பெரியஅளவில் தீவிரமாகப் எதிர்ப் பிரச்சாரம்செய்த நிலையில் தி.மு.கவுக்குக்சட்டமன்றத்தில் கிடைத்த இடங்கள் 186.

அப்பொழுது ராஜாஜிகையொப்பமிட்டு கல்கி இதழில் (4.4.1971) என்ன எழுதினார் தெரியுமா?

இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத்தகுதி இழந்து விட்டது. இந்தராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிவிடவேண்டும் என்று சில மகா புருஷர்கள்உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று எழுதினார். தமிழ்நாட்டில்தந்தை பெரியார் உறுதி செய்த நாத்திகம்எத்தன்மையுடையது என்பதை இதன்மூலம் நன்கு அறியலாமே!

ஆன்மீக அரசியல் பேசுவோருக்கும்இது காணிக்கை!

இராமாயணத்தில் தசரதன்அமைச்சரவையில்கூட ஜாபாலி என்றநாத்திகர் இருந்தார். அவர் ஒரு பார்ப்பனர்.

நாத்திக வாதமென்றால் ஜாபாலிசொன்னதுபோல் இருக்க வேண்டும். பவுத்த மதம், ஜைன மதம் நம்மிடம்நாத்திக வாதம் பேசி இருக்கிறது. புனர்வாதம், புத்திவாத மெல்லாம் பேசிஇருக்கிறார்கள் என்று காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மணியனின் இதயம் பேசுகிறது இதழுக்கு(10.7.1988) அளித்த பேட்டியில்கூறியதுண்டே!

உண்மைகள் இவ்வாறு இருக்கநாத்திகம் என்றால் தவிர்க்கப்படவேண்டிய பெருமையற்ற வார்த்தையல்ல - எதிர்மறையான சொல்லாடலும் அல்ல. பகுத்தறிவை உள்ளடக்கிய தலைநிமிர்ந்துசொல்லக்கூடிய சிந்தனைக்கூர்மையுடைய கம்பீரமான பொருள்பொதிந்த சொல்லே.

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதைஇல்லையோ,

சமத்துவத்திற்கு இடமில்லையோ,

அங்கெல்லாம் இருந்துதான்நாஸ்திகம் முளைக்கிறது.

- தந்தை பெரியார், குடிஅரசு 07.09.1930

- கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்