எட்டு வயதுக்குள் மகளை திருமணம் செய்து கொடுக்காத தந்தைக்கு மனுஸ்மிருதி கூறும் தண்டனை - இந்து மத வக்கிரத்தின் கொடூரம்...
இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்..
அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?
ஸ்சுலோகம்:
“மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...”
இந்த ஸ்மிருதி விதியை விளக்கி பதிவிட எனக்கே கூசுகிறது, தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என பயப்படுகிறேன்.
விளக்கம் :
உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும்.
தவறிவிட்டாய். அவள் இப்போது (கன்னி) ருதுவாகிவிட்டாள்.
ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால், அவள் பிருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு (மாதவிடாய்) அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.
பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமா..? மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா?
அடப்பாவிகளா?... வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ.. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.
அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மனு தண்டனை எத்தனை கொடுமை..?
இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க அதற்க்கான பரிகாரத்தையும் மனு ஸ்மிருதி கூறுகிறது..
பரிகாரம்:
நீ இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின் (மாதவிடாய்) போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.
அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ, அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா...எங்கு போய் எங்கு வருகிறார் மனு என்று ?
(அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?)
கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டதென்றால் அடுத்த ஒருவருஷம் வரை அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும்.
ஒளபாசனம் என்றால் "அக்னி காரியம்" தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் அந்த ஒரு வருடம் வரை அவள் கணவன் வீட்டில் இருந்தாலும், கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும், ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது .
ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.
இதற்கிடையில்... ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன்.
அவன்... இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.
இப்பழக்கம் ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை..
அந்த ஒரு வருஷம் 6 மாசங்களானது. அப்போதும் கஷ்டம். என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று. கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது.
அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள் 15 நாள்கள் ஆக்கினார்கள்.
அதுவும் தேய்ந்து 7 நாள்களானது.
பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து.. இப்போது காலையில் கல்யாணம் ராத்திரி சாந்தி முகுர்த்தம்.
பார்ப்பனர்கள் சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் செய்து தொடர்கின்றனர்..
-தாதாசாரியார்
- முகமது நசீம்,(பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள் குழு) முகநூல் பதிவு, 26.12.17