ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மொழிக்கு மொழி மொழிப்பெயர்ப்பில் வித்தியாசப்படும் குரான்


1400 வருடங்களாக குரானின்  ஒரு வார்த்தை  கூட மாறவில்லை  என்று  மார்தட்டிக்கொள்ளும் முஸ்லிம்கள்  இதட்கு  பதில்  தருமாறு  கேட்டுக்கொள்கிறேன் .

சூரா  புர்கான் 

تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا‏
தமிழ் மொழிபெயர்ப்பு
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.

ஆங்கில மொழிபெயர்ப்புகள்

1. Blessed be He Who has placed in the heaven big stars, and has placed therein a great lamp (sun), and a moon giving light. – Translated by Muhammad Muhsin Khan

2. Blessed is He Who made constellations in the skies, and placed therein a Lamp and a Moon giving light - Yusuf Ali

3. Blessed is He who has established constellations in the sky and made therein a lamp and a shining moon. -Muhammad Sarwar

இங்க நம்ம  முமீன்கள் தமிழ்  மொழிபெயர்ப்பபை  மட்டும் வாசிச்சிட்டு  கோளம் (Sphere ) வடிவிலான  கோள்கள்  என்று குரான்  கூறுவதாக அடிச்சி  விடுகிறார்கள் . ஆனால்  ஆங்கிலத்தில் கோளம்  என்று  கிடையாது constellation( நட்சத்திர கூட்டம்) என்று தான் உள்ளது.

அதன்  மூல  அரபி  வசனத்தில்  கூட கோளம்  என்ற  வார்த்தை  இல்லை  மாறாக بُرُوجًا (நட்சத்திர  கூட்டம்/ constellation / Zodiac  ) என்றே  உள்ளது
தமிழில்  மொழிபெயர்த்தவருக்கு  தமிழ்  தெரியாதா  அரபி  தெரியாதா  என்ற சந்தேகம் ஒரு புறம்  இருக்க இந்த  சிறிய  விடயத்துலேயே  இப்படி வித்தியாசம்  இருக்கே  முழுசையும்  கிண்டுனால் எவ்வளவு  இருக்கும்  என்ற எண்ணம் வருகின்றது
பந்தி பந்தியாய்  காப்பி  பேஸ்ட் பண்ணி   கொட்டாமல். கோளம்  என்பதட்கான  அந்த குரான்  வசனத்தில்  உள்ள அரபி சொல்லை  மட்டும் பதிந்து  விளக்கம் தந்து  கோளம்  எப்படி  = நட்சத்திர  கூட்டம் ஆகும் என்றும்   பதில் அளித்தால்  மகிழ்ச்சி    மகிழ்ச்சி
- ஆறாம் அறிவு முகநூல் பதிவிலிருந்து, 21.2.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக