*"பார்ப்பானும் மாட்டுக்கறியும்"*
⚫ ஆரிய பிராமணன் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள், கோடரி பயன்படுத்தினார்கள் என்று...
*ரிக்வேதம் [10/ 72/ 6] சுலோகம்* சொல்லுகிறது
⚫ ரிக்வேதகால ஆரிய பிராமணன், உணவுக்காக பசுக்களை கொன்றர்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உணடார்கள் என்பதனை...
*ரிக்வேதம் [10/ 86/14] தெளிவுப்படுத்துகிறது*
⚫ இந்திரன் கூறுகிறான்" அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்து சாப்பிட்டார்கள்".
⚫ அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளையும், காளை மாடுகளையும், கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் கொன்றார்கள் என...
*ரிக்வேதம் [10/ 91/14] கூறுகிறது*
⚫ அறுத்து பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன் 21 ஜென்மங்களுக்கு பலியிடும் விலங்காக உருவெடுப்பான்.
*மனு ஸ்மிருதி [பாகம் 5/ வசனம் 35]*
⚫ இறைச்சிக்குறிய மிருகங்களை உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் *பிரம்மனே படைத்தான்.*
*மனு ஸ்மிருதி [பாகம் 5/ வசனம் 30]*
⚫ பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்.
*ரிக் வேதம் [6/17/1]*
⚫ வேதகாலத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டன. பசு வின் இந்த புனித்தன்மை காரணமாகவே பசுமாடுக்கறியை ஆரிய பிராமணனர்கள் உண்டார்கள்.
⚫ ராமாயணத்தில் ராமன் தன்னுடைய மனைவி சீதையை மடியில் படுக்க வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்த மாட்டுக்கறியை சீதைக்கு ராமன் ஊட்டினான் என்று வால்மீகி ராமாயண குறிப்பு கூறுகிறது.
⚫ *அதே வால்மீகி ராமாயணத்தில்...* ராமனுடைய தந்தை தசரதனுக்கு மகடபேறு பாக்கியம் இல்லாத காரணத்தால் , நூற்றுக்கணக்கான பசுமாடு , குதிரை , பன்றி, பாம்பு , ஆமை போன்ற விலங்குகளை யாகத்தில் போட்டு எரித்து கொன்றார்கள். இதில் நன்றாக வெந்த மாட்டுக்கறி பாகத்தை யாகம் செய்த பிராமணன் சாப்பிட்டார்கள் என்று *[பால காண்டம்]* குறிப்பு சொல்லுகிறது.
⚫ "இந்து வேதங்களில் மாட்டுக்கறியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது.
*[ The Complete Work Of Swami Vivekananda Vol 3 Page 536 ]*
பட்டியலிடப்பட்ட மக்களை விட பிராமணன்தான் அதிகளவு மாட்டுக்கறியை சாப்பிட்டான் . ஏனென்றால் ? அக்காலகட்டத்தில் பட்டியலிடப்பட்ட மக்களுக்கு பசுமாட்டுக்கறி கிடைப்பது அவர்களுடைய பொருளாதார வசதிக்கு கடினம் . ஆனா பிராமணனுக்கு மாட்டுக்கறி தினதோறும் ஈசியாக கிடைத்துவிடும்.
*எப்படி என்றால்...?*
பிராமணன் எங்கெல்லாம் யாகம் செய்ய போகிறானனோ அங்கெல்லாம் பசுமாட்டை பலி கொடுப்பதை இந்துகள் ஒரு புனிதமான காரியமாகவே கருதினார்கள். எனவே யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட பசுமாட்டுகறியை பிராமணனுக்கு கொடுப்பது இந்துகளின் வழக்கம்.
இன்றுகூட நம்முடைய நடமுறை வாழ்கையில் , எதாவது ஒரு இந்து வீட்டில் யாகம் செய்தால் யாகத்தில் படைக்கப்பட்ட பொருட்களை அப்படியே பிராமணன் எடுத்துக் கொண்டு போயிவிடுவான்.
*உதாரணத்துக்கு...*
இந்து வீட்டில் யாராவது இறந்தால் , இறந்தவருக்கு 16- ஆவது நாள் காரியம் செய்வது வழக்கம். இதில் பச்சஅரிசி , தேங்காய் , வாழைபழம் , ஒன்பது வகையான காய்கறிகள் வைப்பது நடமுறை . இதில் பயன்படுத்தும் பொருட்களை அப்படியே ஆரிய பார்ப்பனீயன் கொண்டு சென்று விடுவார்கள்.
ஏன் பிராமணன் மாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்த்தான் ?
கிமு 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு வாக்கில் இந்தியாவில் *"புத்தம் மதம்"* வீரியமாக வளந்தது . புத்த மதம் வீரியமாக வளர்வதற்கு முக்கிய காரணம் புத்த மதம் கடவுளு என்கிற பெயரில் பலியிடுவதை எதிர்த்தது . இதன் காரணமாக மக்களுக்கு புத்த மதத்தின் மீது ஒருவகையான ஈர்ப்பு ஏற்பட்டு மக்கள் புத்த மதத்துக்கு மாறினார்கள் அல்லது அதனை ஏற்றுக் கொண்டார்கள்.
இதனை சகித்துக் கொள்ள முடியாத ஆரிய பார்ப்பனீய கூட்டம் புத்த மதத்தை அழிக்க முயற்சி எடுத்தது . இதன் நீட்சியாக ஆரிய பிராமணன் புத்த மதத்தை அழிக்க புத்திஸ்ட்கள் எடுக்கும் ஆயுதத்தையே கைலெடுத்தார்கள்
ஒருவனை அழிக்க அவனுடைய கோணத்திலே சென்று அவன் பயன்படுத்திய ஆயுதம் எடுத்து அழிப்பது ஒருவகையான ராஜதந்திரம்
*"அதுதான் மாடு"*
ஆரிய பார்ப்பனீயன் புத்த மதத்தை அழிபதற்குகாக பசுமாட்டை கடவுளாக வழிபடவும் மாட்டுக்கறியை இனி திங்க மாட்டோம் என்கிற முடிவை எடுத்தார்கள். பார்ப்பனீயன் பசுமாட்டுமீதுள்ள அக்கரையால் பசுமாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்க்கவில்லை . மாறாக அவன், அவன் இறக்குமதி செய்த கடவுளை காப்பாற்றிக் கொள்ளவும், தன் மதத்தை விரிப்படுத்துவும்தான் பசு மாட்டுக்கறியை திங்குவதை நிறுத்தினார்கள். இதற்கு ஆதாரம்தான் மேலே உள்ள ஆதாரங்கள்...
ஆரிய பிராமணன் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதனை விளக்க நாம ஒன்றும் *டாக்டர் அம்பேத்கர் நூலிருந்தோ..., அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நூலிருந்தோ..., ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூலிருந்தோ ஆதாரத்தை மேற்கோள்களாக நாம் காட்டவில்லை.*
மாறாக அவர்களுடைய புனித நூலான... (?) *மனு ஸ்மிருதி, மனுதரும சாஸ்திரம் மற்றும் விவேகானந்தர் நூலி* ருந்துதான் ஆதாரத்தை காட்டுகிறோம்.
கம்ப இராமாயணத்தில் கம்பன், ராமன் மற்றும் பிராமணன் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டார்கள் என்று சொல்லிருப்பது பச்ச பித்தலாட்டமேயொழிய வேறொன்றுமில்லை.
வால்மீகி ராமயணத்தில் வால்மீகி ராமனையும் பார்ப்பனீயர்களை வெகுசாதாரணமான மனிதர்களாகவே காட்டியிருப்பார். ஆனா கம்ப ராமாயணத்தில் கம்பன் ராமனையும் பார்ப்பனீயர்களையும் கடவுளாக வெளிபடுத்திருப்பார்.
"இடைநிலை சூத்திர பாரப்பனர் அல்லாத சாதிகாரர்கள் ஏன் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டார்கள்"...?
எப்போதும் மனித இனம் ஒருவன் செய்வதையே தானும் அப்படியே செய்ய வேண்டுமென நினைப்பான். பார்ப்பனீயனை போல இடைநிலை சூத்திர பிரமனர் அல்லாத சாதிகாரனும் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டுக்கறி திங்குவதை நிறுத்திக் கொண்டார்கள்.
சில இடைநிலை சாதிகாரர்கள் பிராமணன் போல முதுகில் பூணூல் போடும் பழகத்தையும் கடைபிடித்தான். இன்றும் நம்முடைய சமகாலத்தில் சில இடைநிலை சாதிகாரன் பூணூல் அணிவதை காணமுடியும் .
*பிராமணன் இரண்டு புரட்சிகளை செய்தார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொல்லுகிறார் கேளுங்கள்...*
1. பிராமணன் பசுமாட்டுக்கறியை தவிர்த்தது ஒரு புரட்சி"
2. காய்கறி உணவு உண்பவர்களாக மாறியது மற்றொரு புரட்சி" என்று *டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய "தீண்டப்பாடதவர்கள்"* நூலில் குறிப்பிடுகிறார்.
இந்திய சமூகத்தில் பட்டியலின மக்கள் மட்டுமே மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள் என்பது முழுமையான வடிகட்டிய பொய்.
மாட்டுக்கறியை பட்டியலின மக்களை விட ஆரிய பிராமணன் அதிகளவில் சாப்பிட்டான் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.
*- திராவிடக்குயில் -*