ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஆன்மா அடங்காத ஒன்றா?


மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரி யங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என் பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.
- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)


விடுதலை,6.2.15,பக்கம்-7

திதி மந்திரமும் அதன் பொருளும் மந்திரம்:

என்மே மாதா ப்ரலுலோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம...
பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன்.
என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டி யுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்த மென்ன?
தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப்படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான்.
ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது...
பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு.
எனவே இந்துமதப்படி பெற்றோர்களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள்.
இதைத்தான் இந்து மதம் கூறுகிறது.
-விடுதலை,6.2.15,பக்கம்-7